twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேர்மறை எண்ணங்களே குழந்தைகள் விரைவில் குணமடைய காரணம்-ஆலியா பட்

    |

    சென்னை: குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் பங்கேற்று பேசிய நடிகை ஆலியா பட், ஆசியாவின் மிகப்பெரிய பாய் ஜெர்பாய் வாடியா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு பலருக்கு நன்மை அளித்து வருவது ஒரு பெருமையான விஷயம். இதை ஓவிய கண்காட்சி மூலம் நிதி திரட்டி அதன் மூலம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது ஒரு நல்ல முயற்சி என்று குறிப்பிட்டு பேசினார்.

    குழந்தைகளுக்கான பாய் ஜெர்பாய் வாடியா மருத்துவமனை என்பது ஒரு லாப நோக்கமற்ற பொது அறக்கட்டளை. வாடியா அறக்கட்டளை மருத்துவமனை மூலம் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் கீழ் தட்டில் உள்ள குழந்தைகளுக்காக அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பராமரிப்புகள் மானியத்துடனும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. 1929ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாகும்.

    Good Effort to raise fund for Children’s Heart Operation

    அந்த வகையில் தற்போது இதய நோய் உள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக நிதி திரட்டும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதற்காக ஆர்ட் ஃபார் தி ஹார்ட் என்ற ஓவிய கண்காட்சி அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த ஓவிய கண்காட்சியினை ஆதரிக்கும் வகையில் பாலிவுட் முன்னணி ஹீரோயினான ஆலியா பட் திறந்து வைத்தார். ஓவிய கண்காட்சி மூலம் நிதி திரட்டும் முயற்சியை ஆதரிக்க முன்வந்துள்ளார்.

    அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போது குழந்தைகள் பெரியவர்களை விட நேர்மறையானவர்கள். அவர்களுக்கு அவர்களின் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது தெரியாது. மேலும் அவர்களுக்கு எதிர்மறையான மனநிலையும் இருக்காது என்பதால் அவர்களால் எளிதில் குணமடைய முடிகிறது என்று தன் கருத்தினை தெரிவித்தார்.

    Good Effort to raise fund for Children’s Heart Operation

    மேலும் ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையான இதில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு பலருக்கு நன்மை அளித்து வருவது ஒரு பெருமையான விஷயம். இதை ஓவிய கண்காட்சி மூலம் நிதி திரட்டி அதன் மூலம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது ஒரு நல்ல முயற்சி என்றார்.

    அவருடன் மருத்துவமனையின் குழந்தை இருதயநோய் நிபுணர் சுமித்ரா வெங்கடேஷ் இருந்தார். இந்த பாய் ஜெர்பாய் வாடியா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் குறைந்த நிதியில் சில நேரங்களில் இலவசமாக மக்களுக்கு உதவுவதன் மூலம் ஒரு அருமையான வேலையைச் செய்கிறார்கள். இது போன்ற நற்செயல்களை மக்கள் புரிந்து கொள்வதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் இது போல முயற்சிகளை மேற்கொண்டு நிதி திரட்டுவது ஒரு நல்ல செயல் என்று பாராட்டினார் ஆலியா பட்.

    பிரபலங்கள் பலர் தற்போது சமூக சேவையில் ஈடுபடுவது மற்றும் அதற்காக குரல் கொடுப்பது மக்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும். அதும் இது போன்ற நற்செயல்களுக்கு பிரபலங்களின் ஆதரவு அவசியம்.

    English summary
    Actress Alia Bhatt, speaking at a painting exhibition to raise funds for pediatric heart surgery, said it was a proud thing that the pediatric intensive care unit at Asia's largest Bai Jerbai Wadia Hospital for Children was benefiting. Speaking about the fund raiser, She said that it was a good effort to raise funds for the surgery.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X