வாரிசு நடிகருடனான காதல் முறிந்தது நல்லதுக்கே: நடிகை ஓபன் டாக்
மும்பை: நடிகர் விக்கி கவுஷலுடனான காதல் முறிந்தது நல்லது என்கிறார் நடிகை ஹர்லீன் சேத்தி.
யூரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படம் மூலம் பிரபலமானவர் விக்கி கவுஷல். அந்த படத்தை இயக்கிய ஆதித்யா தாருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படம் பண்ணுகிறார். இதற்கிடையே விக்கியும் அவரின் காதலியான வெப்சீரிஸ் நடிகை ஹர்லீன் சேத்தியும் பிரிந்துவிட்டனர்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்கி தான் தற்போது சிங்கிளாக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து ஹர்லீன் கூறியிருப்பதாவது,

விக்கி கவுஷல்
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் காதல் முறிவு என்னை பாதிக்கவே இல்லை. என் குடும்பம் மற்றும் நண்பர்கள் தான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு என்று தனி அடையாளம் உள்ளது.

படங்கள்
நான் ஒரு பட நடிகரை காதலித்ததாலோ, நான் இதுவரை படத்தில் நடிக்காததாலோ எனக்கு என்று அடையாளம் இல்லாமல் இல்லை. நான் யாரையும் விட குறைந்து போகவும் இல்லை. நான் ஹர்லீன் சேத்தியாக இருப்பது பிடித்துள்ளது.

ஹர்லீன் சேத்தி
ஒருவரை என் முன்னாள் காதலர் என்று கூறுவது தவறு என்று நினைக்கிறேன். நான் யாருடைய முன்னாள் அல்லது வருங்கால காதலி கிடையாது. நான் ஹர்லீன் சேத்தி. காதல் முறிவால் என் நடிப்பு பாதிக்கப்படவில்லை. ஒரு வகையில் நடந்தது நல்லதுக்கே நடந்துள்ளது.

தோல்விகள்
நாம் எதையுடம் திட்டமிடுவது இல்லை. எல்லாம் இறைவன் செயல். காதல் முறிவால் நான் சோர்ந்துவிட மாட்டேன். வெற்றிகளால் பெருமையடைய மாட்டேன். தோல்விகள் என்னை கொல்லாது. நான் முழுமையானவள் என்று உணர்கிறேன் என்கிறார் ஹர்லீன் சேத்தி.


Click it and Unblock the Notifications











