ரொம்ப அழகாக இருப்பதால் பட வாய்ப்பை இழந்த தீபிகா: என்ன கொடுமை சார் இது!
மும்பை: மிகவும் அழகாக இருப்பதால் பட வாய்ப்பை இழந்துள்ளார் தீபிகா படுகோனே.
தீபிகா படுகோனே நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம் வருகிறார். அவர் நடித்துள்ள பத்மாவதி படம் பிரச்சனையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் திரையுலகம் பற்றி தீபிகா கூறியதாவது,

பட வாய்ப்பு
பாலிவுட் என்றாலே படுக்கைக்கு சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று பலர் என்னிடம் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக பட வாய்ப்புக்காக நான் அட்ஜஸ்ட் செய்யவில்லை.

நடிப்பு
பட வாய்ப்புக்காக நான் அட்ஜஸ்ட் செய்யவில்லை. நான் பாதுகாப்பாக இங்கு உணர்கிறேன். ஆனால் அனைவருக்கும் என் போன்று நடப்பது இல்லை.

இயக்குனர்
நான் அழகாக இருப்பதால் சில பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். நான் இரண்டு முறை வேலை செய்துள்ள இயக்குனர் ஒருவர் என்னிடம் வந்து இந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள். கதைக்கு ஒத்து வராது என்றார்.

ஏன்
என்னால் நடிக்க முடியும் என்று இயக்குனருக்கு தெரிந்தால் நான் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்வேன் என்பது அவருக்கு தெரியாதா.

கஷ்டம்
என் கடின உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஒரே இரவில் அனைத்தும் நடந்துவிடவில்லை. நான் பட்ட கஷ்டம் என் குடும்பம், டீமுக்கு தெரியும் என்று தீபிகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











