சூர்யா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி… மீண்டும் தொடங்குது என்.ஜி.கே. ஷூட்டிங்!

என்.ஜி.கே திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

சென்னை: கிறிஸ்துமஸ் விழாவுக்கு என்.ஜி.கே திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் சூர்யா செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படம் என்.ஜி.கே. இந்த ஆண்டின் முக்கிய படங்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்பட்ட என்.ஜி.கே செல்வராகவனின் உடல்நலக்குறைவால் தாமதமானது.

Good news about NGK!

தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்து தாமதமான இப்படத்திற்கு தற்போதுதான் நல்ல நேரம் வந்துள்ளதாகத் தெரிகிறது.

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சூர்யா 37 திரைப்பட படப்பிடிப்பு நாளையுடன் நிறைவடைகிறது. குலுமணாலியில் தற்போது படப்பிடிப்பு நடத்திவரும் படக்குழுவினர், இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிக்க உள்ளனர்.

நாளை சூர்யா 37 படப்பிடிப்பு நிறைவடைந்ததும், விரைவில் என்.ஜி.கே திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. குருபெயர்ச்சிக்கு அப்புறம் குணமா சொல்லன்னும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சொல்லியிருந்தார். அவர் சொன்னதுபோல், நல்ல செய்தி வந்துள்ளது.

படத்தின் அடுத்தகட்ட வேலைகளை விரைவாக முடித்துவிட்டு, டிசம்பரில் கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

என்.ஜி.கே திரைப்படத்தில், என்.ஜி.கே திரைப்படத்தில் சாய் பல்லவி, ரகுல்ப்ரீத் சிங், பாலசிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X