Bharathiraja Health Update: டிஸ்சார்ஜ் ஆனார் பாரதிராஜா.. திரையுலகத்தினர் மகிழ்ச்சி.. ராதிகா ஆசை நிறைவேறுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளங்களில் ஒருவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா கடந்த வாரத்தில் உடல்நிலை பின்னடைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளாதால் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளதால் திரைத்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர். நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இப்படி இருக்கையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இப்படி இருக்கையில் நடிகை ராதிகாவின் தாய் கிழவி படத்தை எப்படியாவது அவரைப் பார்க்க வைக்க வேண்டும் என்று ராதிகா விரும்புவதாக படத்தின் புரோமோஷன் விழாவில் தெரிவித்திருந்தார். ராதிகாவின் தாயார் மறைந்த போது, துக்கம் விசாரிக்க வந்தவர் தனது தாய் கிழவி படத்தின் போஸ்டரைப் பார்த்து அவர் எமோஷனலாகி அழுததாகவும் கூறினார். இந்நிலையில் பாரதிராஜா டிஸ்சார்ஜ் ஆகி உள்ளதால் தாய் கிழவி படத்தை பார்ப்பாரா என்ற கேள்வியை விவரம் தெரிந்தவர்கள் கேட்டு வருகிறார்கள்.
இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். தனது மகன் மறைந்தது பாரதிராஜாவை மிகவும் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாக்கியது. தனது மகனின் மறைவுக்குப் பின்னர், பாரதிராஜாவுக்கு ஏற்பட்ட மனதளவிலான பாதிப்பு என்பது அவரை உடலளவிலும் பெரிய அளவில் பாதிப்படையச் செய்தது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி ஆவதும், டிஸ்சார்ஜ் ஆவதுமாகவே இருந்தார்.


Click it and Unblock the Notifications