இருக்கு ஷங்கருக்கு '3.0' எடுக்கும் ஐடியா இருக்கு
Recommended Video

சென்னை: 3.0 படம் வரும் வாய்ப்பு உள்ளது என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவையே பிரமாண்டமாக நடத்தி அனைவரையும் அசத்தியுள்ளார் ஷங்கர். படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி ரூபாய் அதிகரித்தாலும் தயாரிப்பாளரான லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் கொஞ்சம் கூட முகம் சுளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ரூ. 300 கோடியில் துவங்கி கிட்டத்தட்ட ரூ. 600 கோடியை தொட்டுள்ளது பட்ஜெட்.
நிகழ்ச்சியில் ஷங்கர் பேசியதாவது,

சிட்டி
2.0 படத்தில் ரஜினிகாந்தை வசீகரன், சிட்டி, ராட்சச சிட்டியாக பார்ப்பீர்கள். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. 5வது விசை என்பது நெகட்டிவ் எனர்ஜி. ஆராச்சியாளர்களிடமே அதற்கு பதில் இல்லை. எனக்கு 3.0 பற்றி சின்ன சின்ன ஐடியா உள்ளது. கதை தோன்றினால் 3வது பாகம் நிச்சயம் உருவாகும்.

2.0
லைகா இல்லை என்றால் 2.0 இல்லை. படத்தின் பெரிய பலமே ரஜினி சார் தான். படத்தை துவங்கியபோது அவருக்கு உடல்நலம் சரியில்லை. இருப்பினும் அவர் டெல்லிக்கு வந்து 40 டிகிரி வெயிலில் வேலை பார்த்தார். யாரையும் காத்திருக்க வைக்க அவர் விம்பவில்லை. அவரின் அர்ப்பணிப்பால் தான் அவர் இன்னும் சூப்பர் ஸ்டார்.

ஏ.ஆர். ரஹ்மான்
2.0 படத்திற்கான பேக்கிரவுண்ட் ஸ்கோரை ஏ.ஆர். ரஹ்மான் 6 மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தார். அதை அவரை மீண்டும் மீண்டும் மேம்படுத்திக் கொண்டே இருந்தார் என்றார் ஷங்கர்.

கனவு
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் 2.0 படத்தின் 4டி எஸ்.ஆர்.எல். டீஸர் வெளியிடப்பட்டது. 4டி சவுண்டில் படத்தை வெளியிடுவது தனது நான்கு ஆண்டு கால கனவு என்று தெரிவித்தார் ஷங்கர்.


Click it and Unblock the Notifications











