லவ்வரை அறிமுகப்படுத்திய மணிகண்டன்.. குட் நைட்டுக்கு பிறகு ஒரே ரொமான்ஸ் மூடு தான் போல!

சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய மணிகண்டன் தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மாஸ் காட்டி வருகிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம் சுமார் 5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி நல்ல வசூல் ஈட்டி வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், என்னுடைய லவ்வர் இவர்தான் என மணிகண்டன் நடிகை ஒருவரை பார்க்கில் வைத்து அறிமுகப்படுத்தியுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதற்கு பின்னாடி என்ன விஷயம் இருக்கிறது என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

Good Night Hero Manikandan introduces his Lover

ஜெய் பீம் மணிகண்டன்: ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கிய மணிகண்டன் விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாகவும் நடிகராகவும் அறிமுகம் ஆகியிருந்தார். சில்லு கருப்பட்டி படத்தில் மணிகண்டனை அழகாக பயன்படுத்தியிருந்தார் ஹலிதா ஷமீம். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் அய்யாக்கண்ணுவாக நடித்து ரசிகர்களை அழ வைத்துவிட்டார்.

குறட்டை விடும் ஹீரோ: தமிழ் சினிமாவில் ஹீரோ என்றாலே மாசாக காட்டி வரும் நிலையில், குறட்டை விடும் ஒரு நபரை நாயகனாக இந்த ஆண்டு குட்நைட் படத்தின் மூலம் இயக்குநர் விநாயகர் சந்திரசேகரன் அழகாக காட்டியிருந்தார். பெரிய அலப்பறை, அடிதடி, ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள், விவாகரத்து, காதல் தோல்வி என எமோஷன்களை பிழிவது என இல்லாமல் மென்மையான ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில், மணிகண்டன் தன்னை அழகாக பொருத்தி நடித்த விதம் அனைவரையும் இந்த ஆண்டு அதிக அளவில் கவர்ந்தது. மேலும், மத்தகம் என்னும் வெப்சீரிஸில் மிரட்டல் ஆகவும் நடித்திருந்தார்.

Good Night Hero Manikandan introduces his Lover

லவ்வரை அறிமுகம் செய்த மணிகண்டன்: சமீபத்தில், குட்நைட் படத்தின் நாயகி மீதா ரகுநாத் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், மணிகண்டன் தற்போது தனது லவ்வரை அறிமுகம் செய்து வைத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், ட்விஸ்ட் என்னவென்றால் இது ரியல் லவ்வர் கிடையாது. மணிகண்டன் அடுத்து நடிக்கும் படத்தின் டைட்டில் தான் 'லவ்வர்'.

ஜிங்கர்ததங்கா: மாடன் லவ் சென்னை எனும் ஓடிடி படைப்பில் இடம்பெற்ற லாலாகுண்டா பொம்மைகல் கதையில் நாயகியாக நடித்த ஸ்ரீ கௌரி பிரியாவை திவ்யா என்றும் அவர் தான் தனது லவ்வர் என்றும் தற்போது வீடியோ வெளியிட்டு புதிய புரமோஷனை செய்துள்ளார் மணிகண்டன். ராஜா ராணி படத்தின் போது நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் என அட்லீ பரபரப்பை கிளப்பியது போல பிரபு ராம் இயக்கத்தில் உருவாகி வரும் லவ்வர் படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படி ஒரு புரமோஷனை மணிகண்டன் செய்துள்ளார்.

ஜெய்பீம் படத்தில் எலி வேட்டையாடும் அய்யாக்கண்ணுவாக நடித்த மணிகண்டனா இது இப்படி உடல் எடையை குறைத்து காலேஜ் பாய் லுக்கில் செம க்யூட்டாக இருக்காரே என இளம் ரசிகைகள் எல்லாம் வாயை பிளக்கும் அளவுக்கு செம அழகாக மாறியிருக்கிறார் மணிகண்டன். ஸ்ரீகெளரி பிரியாவின் நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை. அடுத்த ஆண்டும் ஒரு ஃபீல் குட் மூவியை கொடுப்பார் குட் நைட் ஹீரோ என்பது உறுதியாகி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X