GOAT படத்தில் விஜயகாந்த் வாய்ஸ் பேசியது அந்த பிரபல நடிகரா?.. வேறலெவல் சம்பவம் ஆச்சே!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் ஆரம்பத்திலேயே விஜயகாந்த் என்ட்ரி படு மாஸாக இடம் பெற்றிருக்கும். விஜயகாந்த் கேமியோ என்றதும் ரசிகர்கள் தனியாக ஒருவர் விஜயகாந்தாக வருவார் என எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் தியேட்டரில் காத்துக் கொண்டிருந்தது.
மேலும், அந்த காட்சியில் விஜயகாந்தின் குரலும் இடம்பெற்று ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்தின் முகத்துக்கு ஏஐ தொழில்நுட்பம் மூலம் அதனை படக்குழு உருவாக்கிய நிலையில், விஜயகாந்த் குரலை ஏஐ மூலமாக கொண்டு வராமல் மிமிக்ரி செய்து உள்ளனர்.

அதுவும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் பிரபல ஹீரோவே மிமிக்ரி செய்துள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய்க்கு முன்னதாக விஜயகாந்த் என்ட்ரி: கோட் படத்தில் தளபதி விஜய்யை காட்டுவதற்கு முன்பாக விஜயகாந்தின் என்ட்ரியை தான் வெங்கட் பிரபு வைத்துள்ளார். திரையில் அவர் வரும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் நடித்த காட்சிகளை ரெஃபரன்ஸ் ஆக வைத்து தான் ஏஐ மூலம் அந்த சீனை உருவாக்கினோம் என வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
விஜயகாந்த் வாய்ஸ் பேசியது யாரு?: விஜயகாந்த் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நிலையில், அவரது குரலும் ஏஐ மூலம் உருவாக்கியிருப்பார்கள் என நினைத்த நிலையில், அந்த காட்சியில் விஜயகாந்துக்கு மிமிக்ரி மூலம் டப்பிங் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குட் நைட் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வரும் மணிகண்டன் தான் விஜயகாந்த் குரலில் மிமிக்ரி செய்து டப்பிங் பேசியுள்ளாராம்.
நடிகர் மணிகண்டன்: வசனகர்த்தாவாக படங்களில் அறிமுகமான மணிகண்டன் விக்ரம் வேதா, காலா உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்த நிலையில், குட் நைட் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக மாறினார். இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியான அவரது லவ்வர் திரைப்படமும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து அசத்திய மணிகண்டன் தொடர்ந்து சினிமாவில் போராடி தனக்கான இடத்தை பிடித்து விட்டார். ஜெய்பீம் படத்தில் அவர் நடித்த நடிப்பு எல்லாம் வேறலெவல் சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும்.

விஜயகாந்த் குடும்பம் ஹேப்பி: விஜயகாந்த் ஏஐ போர்ஷனை பார்த்த தளபதி ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும், விஜயகாந்த் ரசிகர்களுக்கு அந்த காட்சி பெரிதளவில் திருப்தியை தரவில்லை. ஆனால், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் இருவரும் அந்த காட்சியை பார்த்து ரொம்பவே ஹேப்பி ஆனோம் எனக் கூறியுள்ளனர்.
விஜயகாந்த் படம் காப்பி: ஜெமினி மேன் படத்தில் இருந்து க்ளோனிங் விஷயத்தை விஜய் படத்துக்கு வெங்கட் பிரபு காப்பியடித்தார் என ட்ரோல்கள் குவிந்து வரும் நிலையில், விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான ராஜதுரை படத்தின் அப்பட்டமான காப்பி தான் கோட் படம் என்கிற ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. தொடர்ந்து விஜய் படங்கள் ஏகப்பட்ட சர்ச்சைகளையும் ட்ரோல்களையும் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











