குட் நைட் பட நடிகைக்கு திடீர் கல்யாணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: முதல் நீ முடிவும் நீ, குட்நைட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த மீதா ரகுநாத்துக்கு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர் கணவருடன் இருக்கும் திருமண போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஊட்டியை சேர்ந்தவரான மீதா ரகுநாத் தமிழில் முதலும் நீ முடிவும் நீ என்ற படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் பள்ளி செல்லும் மாணவி, கல்லூரி முடித்து இளம்பெண் என இருவேறு விதமான தோற்றங்களில் தோன்றி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார். இந்த படத்துக்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆடிஷனுக்கு வந்த நிலையில் அவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார் மீதா ராகுநாத். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

good night movie actress meetha raghunath got married

மணிகண்டனின் குட் நைட்: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவதாக, ஜெய் பீம் படத்தின் மூலம் புகழ் பெற்ற மணிகண்டனுடன் இணைந்து குட்நைட் படத்தில் இளம் மனைவியாக நடித்திருப்பார். கணவருக்கு குறட்டை காரணமாக ஏற்படும் மன ரீதியிலான பிரச்னையை சமாளிக்கு மனைவி வேடத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் மணிகண்டனுக்கு இணையாக கை தேர்ந்த நடிகையாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

good night movie actress meetha raghunath got married

சூப்பர் பாடல்: அதே போல அழகான, சத்தம் போட்டு பேசாத, கண் கலால் காதலை வெளிப்படுத்தும் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதைப்பார்த்த இளசுகள் பலர் அனு போன்று மனைவி அமையவேண்டும் என்று மீம்ஸ்களைக் கூட வெளியிட்டனர். இந்த படத்தில் வரும் பால்கனி காத்துல பாசம் தான் கூடுதோ.. மோகனு லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது என்ற பாடல் மூலம் பலரது கனவு கன்னியாக மாறினார் மீதா ரகுநாத்.

good night movie actress meetha raghunath got married

நிச்சயதார்த்தம்: அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திருமணத்துக்கு தயாராகிவிட்டார். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மீதா ரகுநாத்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகின. ஊட்டியில் மீதாவின் சொந்த ஊரில் அவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரது நிச்சயதார்த்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகின.

good night movie actress meetha raghunath got married

மீதா ரகுநாத்திற்கு திருமணம்: இந்நிலையில் மீதா ரகுநாத்தின் திருமணம் இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலாகமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மீதா இன்ஸ்டா பக்கத்தில் கணவருடன் தான் இணைந்திருக்கும் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளார். மீதா ரகுநாத்தை திருமணம் செய்து கொண்டவர், அவரது நீண்ட நாள் நண்பர் என்றும், இவர்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X