நல்லவரா.. கெட்டவரா? வில்லன் யாரு.. ஹீரோ யாரு? சொடக்கு போட்டு மிரட்டும் கமல்.. அதிர வைக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் இறுதி நாட்களில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் ஹாசன் வாரம் முழுக்க நடந்த சம்பவங்கள் குறித்து விவாதிப்பது வாடிக்கையான ஒன்று.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின.

கமலுக்கு கன்டென்ட்
குறிப்பாக கால் செண்டர் டாஸ்க்கை தொடர்ந்து நடந்த சண்டைகள், பாலாஜி ஆரிக்கு இடையே நடந்த சண்டை என ஏராளமான சம்பவங்கள் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அரங்ககேறின. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வாரம் கமலுக்கு ஏராளமான கன்டென்ட் இருப்பதாக கூறினர்.

கலக்கல் உடையில் கமல்
இந்நிலையில் வார இறுதிநாளான சனிக்கிழமையான இன்று நடிகர் கமல் ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்துள்ளார். இதற்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஷர்ட் ஓவர் கோட் என கலக்கல் உடையில் வந்துள்ளார் கமல்.

வில்லன் யார்? ஹீரோ யார்?
தொடர்ந்து பேசும் கமல் நல்லவரா கெட்டவரா? என கேட்டு கோபம் கொப்பளிக்க முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு சொடக்கு போட்டு பேசுகிறார். மேலும் வில்லன் யார்? ஹீரோ யார்? என்றும் மீசையயை முறுக்கி விட்டப்படி கேட்கிறார் கமல்.

விடை காண்போம்
தொடர்ந்து பேசும் கமல் தன் விளையாட்டை தானே விளையாடுறாங்களா? இல்ல அன்பால் எய்யப்பட்ட அம்பா பாய்றாங்களா? வினாக்கள் பல.. விடைகளை காண்போம் என கூறுகிறார். இந்த புரமோவே மிரட்டலாக உள்ளது.

நீங்கள் ஹீரோ
கடந்த வாரம் ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே நடைபெற்ற சண்டையின் போது பேசிய ஆரி நாங்கள் எல்லாம் வில்லனாகவே இருக்கிறோம், நீ மட்டும் ஹீரோவாக இரு என்று கூறினார். இந்நிலையில் அந்த வசனத்தை கமல் கூறுவதை பார்க்கும் போது பாலாஜி மற்றும் ஆரி விவகாரத்தை கையில் எடுத்து பாலாஜியை வறுத்தெடுப்பார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











