»   »  நல்ல வேளை நமீதா இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை

நல்ல வேளை நமீதா இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நல்ல வேளை நம்ம நமீதா இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் அக்டோபர் 1ம் தேதி துவங்கியது. நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். 18 போட்டியாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த சீசனில் சர்ச்சைக்கு குறைவிருக்காது போன்று.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டை ஆர்ட் இயக்குனர் ஓமங் குமார் மற்றும் அவரின் மனைவி வனிதா ஆகியோர் வடிவமைத்துள்ளனர். அவர்கள் 200 பேருடன் சேர்ந்து 55 நாட்களாக பணியாற்றி இந்த வீட்டை வடிவமைத்துள்ளனர்.

வாஸ்து

வாஸ்து

பிக் பாஸ் வீடு வாஸ்துபடி அமைக்கப்பட்டுள்ளது. தோட்டப் பகுதியில் புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. கலர் கலரான டேபிள்கள், குஷன்கள் போடப்பட்டுள்ளது. ஜிம், நீச்சல் குளம் உள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள் புகைப்பிடிக்க வசதியாக தனியாக ஒரு அறையும் உள்ளது. படுக்கையறையில் 8 டபுள் பெட்டுகள் உள்ளன. போட்டியாளர்கள் அதை தான் பயன்படுத்த வேண்டும்.

டாய்லெட்

டாய்லெட்

பாத்ரூமில் கூட செயற்கை புல் வைத்துள்ளனர். இரண்டு குளியல் அறைகள், டாய்லெட்டுகள் உள்ளன. பிக் பாஸ் வீட்டில் பாதாள சிறை உள்ளது. அதில் சுத்தமே இல்லாத கழிவறை மற்றும் 3 படுக்கைகள் உள்ளன. சரப்ஜித் படத்தில் வந்தது போன்றே வேண்டும் என்று கேட்டு இப்படியொரு கழிவறையை வடிமைக்க செய்துள்ளனர்.

நமீதா

நமீதா

எங்கும் சுத்தம், எதிலும் சுத்தம் என்று பேசும் நம்ம நமீதாவுக்கு இந்த சிறை பாத்ரூமை பார்த்தாலே நிச்சயம் கோபம் வரும். நல்ல வேளை அவர் இந்தி பிக் பாஸில் கலந்து கொள்ளவில்லை.

English summary
Hindi Bigg Boss house has an underground jail with a dirty washroom and three uncomfortable beds.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil