அப்பா மகளின் அலப்பறை..பட்டம்விடும் அமிதாப்.. ராஷ்மிகாவின் ‘குட்பை‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
மும்பை : ராஷ்மிகா மந்தானா மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ள குட்பை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
79வயதான அபிதாப் பச்சன் பாலிவுட்டில் கிட்டத்தட்ட 50ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டின் ஈடுஇணை இல்லாத நாயகனாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறார்.
1969ல் வெளிவந்த சாட்ஹிந்துஸ்தானி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார் அமிதாப் பச்சன் தற்போது வரை நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன் நடித்த முதல் திரைப்படம் சாட்ஹிந்துஸ்தானி அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. முதல்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த், ப்யார் கீ கஹானி, பர்வானா, க்குட்டி, ப்யார் கா கர் போன்ற திரைப்படங்களில் நடித்தார் இதில், ஆனந்த் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

ஏராளமான விருதுகள்
ஷோலே என்ற மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படத்தில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என நிலை நிறுத்திக் கொண்ட அபிதாப் பச்சன், பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொகுப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்.

Goodbye
Goodbye, Uunchai, Ganapath, Ghoomer, The Umesh Chronicles, Project K, Butterfly என அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்துக்கொண்டு 79 வயதிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது, இவர் விகாஸ் பாஹ்லின் இயக்கத்தில் உருவாகி உள்ள குட்பை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், ராஷ்மிகா, அமிதாப்பின் மகளாக நடித்துள்ளார்.

பட்டம் விடும் அமிதாப் பச்சன்
இந்நிலையில், குட்பை திரைப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், அமிதாப் பச்சன் பட்டம் விடுகிறார் அருகில் ராஷ்மிகா நூலைகையில் வைத்துக்கொண்டு நிற்கிறார். தந்தை மகள் பாசத்தை சொல்லும் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில், சாஹில் மேத்தா, ஷிவின் நரங் மற்றும் பாவில் குலாட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 7ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











