மீண்டும் சந்திக்கும் வரை.. ’குட்பை’ நண்பா.. இயக்குநர் சச்சி மறைவு.. அமலா பால் போட்ட உருக்கமான பதிவு
திருவனந்தபுரம்: மலையாள இயக்குநர் சச்சியின் மறைவுக்கு நடிகை அமலா பால் உருக்கமான பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
மலையாள திரையுலகின் பிரபல கதாசிரியரும் இயக்குநருமான சச்சி எனும் சச்சிதானந்தம் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
பிருத்விராஜின் அனார்கலி மற்றும் அய்யப்பனும் கோஷியும் படங்களை இயக்கி உள்ள சச்சியின் மரணத்திற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோகன் லால் படம்
கடந்த 2012ம் ஆண்டு மோகன் லால், அமலா பால் மற்றும் பிஜூ மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ரன் பேபி ரன். இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் வெளியான அந்த படத்திற்கு அட்டகாசமான திரைக்கதையை மறைந்த இயக்குநர் சச்சி தான் எழுதி இருந்தார். இந்நிலையில், தற்போது அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அமலா பால்.

ரேணுகா இன்னும் வாழ்கிறாள்
எனது வாழ்வில் மிகப்பெரிய ஹிட் படத்தை சச்சி எழுதி கொடுத்திருந்தார். மோகன் லாலுடன் நடித்த ரன் பேபி ரன் படத்தின் ரேணுகா கதாபாத்திரம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள். உங்கள் மறைவு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது என நடிகை அமலா பால் மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மீண்டும் சந்திக்கும் வரை
வாழ்க்கை தத்துவங்கள், ஏலியன், மறு வாழ்வு என பல விஷயங்களை சமீப காலமாக பதிவிட்டு வரும் நடிகை அமலா பால், தற்போது உருக்கமாக பதிவிட்டுள்ள அந்த போஸ்ட்டில், மீண்டும் சந்திக்கும் வரை ‘குட்பை' நண்பா என்றும் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் நீங்க
இந்த உலகத்திற்குள் நுழைந்தார், தனது கலையில் மாஸ்டராக மாறினார், மற்றொரு கோணத்திற்கு மாறி மறைந்துவிட்டார். ஏகப்பட்ட நினைவுகளை நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார் என்றும் தனது பதிவில் நடிகை அமலா பால் பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை உருக்கமாக தெரிவித்துள்ளார். அமலா பால் பதிவுக்கு கீழே அவரது ரசிகர்களும் சச்சிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











