2018ல் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் விற்பனையான இந்திய படம் எது தெரியுமா?
Recommended Video

மும்பை: 2018ம் ஆண்டு இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் விற்பனையான 5 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
2018ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. தற்போது தான் 2018ம் ஆண்டு துவங்கியது போன்று இருந்தது ஆனால் அதற்குள் முடியப் போகிறது.
இந்நிலையில் கூகுள் இந்தியா தனது பிளே ஸ்டோரில் அதிகம் விற்பனையான 5 படங்கள் எது என்று தெரிவித்துள்ளது.

படங்கள்
2018ம் ஆண்டு இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் விற்பனையான 5 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஒரேயொரு இந்திய படம் இடம்பிடித்துள்ளது. அது தான் ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான இந்தி படமான ஹிச்கி. ஹிச்கி படம் இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்த நிலையில் அதற்கு இப்படி ஒரு கவுரவம் கிடைத்துள்ளது.

வசூல்
ஹிச்கி படத்திற்கு இந்தியாவை விட சீனாவில் தான் அமோக வரவேற்பு கிடைத்தது. ராணி முகர்ஜியின் அருமையான நடிப்பில் வெளியான அந்த படம் சீனாவில் ரூ. 132 கோடி வசூலித்தது. உலக அளவில் ரூ. 209 கோடி வசூல் செய்தது. தங்கலை அடுத்து சீன மக்கள் ஹிச்கியை கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.

டெட்பூல் 2
பிளாக் பாந்தர், ஜுமாஞ்சி: வெல்கம் டு தி ஜங்கிள், ஜஸ்டீஸ் லீக், டெட்பூல் 2 ஆகியவை தான் ஹிச்கி தவிர்த்து இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் விற்பனையான 4 படங்கள் ஆகும்.

ஆப்
இந்த ஆண்டு கூகுள் இந்தியா பிளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப் "Drops: Learn 31 new languages". அதை இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இந்த ஆண்டு இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு பப்ஜி மொபைல்(PUBG Mobile) என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











