கூகுள் குட்டப்பா படத்தின் அடுத்த அப்டேட்டை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடும் ஏ ஆர் ரஹ்மான்!

சென்னை : மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற அண்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட் டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது

கேஎஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கிய வருகின்றனர் பிக் பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இதில் நடிக்கின்றனர்.

உறவுகளின் பாசத்தை பற்றியும் காமெடி கதை களத்திலும் உருவாகியுள்ள கூகுள் குட்டப்பா படத்திலிருந்து பொம்ம பொம்ம ப்ரோமோ பாடலை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடுகிறார்.

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் ரீமேக்

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் ரீமேக்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள கேஎஸ் ரவிக்குமார் இப்பொழுது தயாரித்து நடித்து வரும் திரைப்படம் கூகுள் குட்டப்பா. மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக கூகுள் குட்டப்பா உருவாகி வருகிறது. ஒரு கிராமத்தில் வாழும் வயதான அப்பாவுக்கும் ரோபோவுக்கு வெளியே உள்ள பாசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வருகின்றனர்.

முதல் முறையாக ஜோடியாக

முதல் முறையாக ஜோடியாக

மேலும் கேஎஸ் ரவிக்குமார் இப்படத்தை தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்தும் வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா முதல் முறையாக இணைந்து ஜோடியாக இந்த படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ் ரசிகர்களின் புரிதலுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாகி வரும் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக ரோபோவை வைத்து

அடுத்ததாக ரோபோவை வைத்து

கேரளாவை ஒட்டியுள்ள தென்காசி பகுதியில் இதன் பெரும்பான்மையான காட்சிகள் எடுக்கப்பட்டது. ஒரு சில காட்சிகளை படக்குழுவினர் ரஷ்யா சென்று எடுத்துள்ளனர் . ரோபோக்களை வைத்து மிக குறைந்த அளவிலேயே தமிழில் திரைப்படங்கள் வெளியாகி இருக்கும் சூழலில் அடுத்ததாக ரோபோவை வைத்து தமிழில் ஒரு அட்டகாசமான படம் உருவாகி வருகிறது . இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிக்கப்பட்டு இப்பொழுது தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பொம்ம பொம்ம ப்ரோமோ பாடல்

பொம்ம பொம்ம ப்ரோமோ பாடல்

முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவில் உறவுகளின் பாசம் குறித்தும் உருவாகிவரும் கூகுள் குட்டப்பா படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்க யோகி பாபு,மனோபாலா, ப்ரான்ங் ஸ்டார் ராகுல் என பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் கூகுள் குட்டப்பா அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள பொம்ம பொம்ம ப்ரோமோ பாடலை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் டிசம்பர் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறார். தெருக்குரல் அறிவு இந்த பாடலை எழுதி சிவாங்கியுடன் இணைந்து பாடியும் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X