கூகுள் குட்டப்பா இரண்டாவது சிங்கிளை வெளியிடும் பிரபல முன்னணி இயக்குனர்.. எப்போது தெரியுமா !

சென்னை : மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாராகி வருகிறது

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார் . பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இதில் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்

இறுதிகட்டத்தை எட்டியுள்ளது இப்படத்தின் இரண்டாவது சிங்கிளை பிரபல முன்னணி இயக்குனர். வெளியிடுகிறார்

 குறைந்த பட்ஜெட்டில்

குறைந்த பட்ஜெட்டில்

மலையாள சினிமாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது மேலும் பல மலையாள திரைப்படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகிறது அந்த அளவிற்கு மலையாளத்தில் அடிக்கடி வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது குறிப்பாக மலையாள சினிமாவில் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனையை செய்கிறது.

 கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா

அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் போடுவாள் இயக்கத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு, சோபின் சோஹிர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வர்ஷன் 5.25 முதியவருக்கும் ரோபோவுக்கு ம் இடையேயான பாசத்தை மிக அற்புதமாக காட்டியிருந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது இப்போது தமிழில் கூகுள் குட் டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது

 வயதான முதியவராக

வயதான முதியவராக

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரிக்க அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இந்த படத்தை இயக்கி வருகின்றனர் மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் வயதான முதியவராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள தர்ஷன் மற்றும் லாஸ்லியா இதில் லீட் ரோலில் நடித்து வருகின்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன் தங்கையாக பழகி வந்த இவர்கள் இந்த படத்தில் ஜோடியாக நடித்தது வருவது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படத்தில் யோகிபாபு,மனோபாலா, ப்ராங் ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 இரண்டாவது சிங்கிள்

இரண்டாவது சிங்கிள் "அலை அலை"

தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு படக்குழு ரஷ்யா சென்று அங்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டது இந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது இந்த படம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இரண்டாவது சிங்கிள் "அலை அலை" நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் எனவும் அந்த பாடலை இயக்குனர் வெங்கட்பிரபு ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார் எனவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X