மனதை மயக்கும் ஜி.வி பிரகாஷின் குரலில்… ‘கூகுள் குட்டப்பா‘.... அலை அலை பாடல் வெளியீடு !
சென்னை : "கூகுள் குட்டப்பா" திரைப்படத்தின் 2வது பாடலான அலை..அலை பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கூகுள் குட்டப்பா திரைப்படத்தை கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குநர்களாக பணி புரிந்து வரும், சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வருகின்றனர். இது இவர்களுக்கு முதல் திரைப்படமாகும். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.
கூகுள் குட்டப்பா திரைப்படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன் லாஸ்லியா, யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்
மலையாளத் திரைத்துறையில் வெவ்வேறு விதமான கதைக்களத்தைக் கொண்டு தரமான திரைப்படங்கள் பல ஆண்டுகளாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் படுவள் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றத் திரைப்படம் தான் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.

Robot & Frank படத்தைத் தழுவி
அமெரிக்க படமான Robot & Frank என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் ஹீரோ சோப்பின் சாஹிர் ரஷ்யாவில் வேலை பார்க்கிறார். ஊரில் தனிமையில் இருக்கும் தனது தந்தை சூரஜை கவனித்துக்கொள்ள ஒரு ரோபோட்டை அனுப்புகிறார்.

சுவாரசியமான கதை
அந்த ரோபோட் சூரஜிடம் நட்பாக பழக ஆரம்பித்து விடுகிறார். ரோபோட்டுக்கு ஜாகதம் பார்ப்பது, உடை மாற்றி விடுவது என அந்த ரோபோட்டுடன் லூட்டி அடிக்க ஆரம்பித்துவிடுகிறார். 4 மாதங்கள் டிரையலாக கொடுக்கப்பட்ட ரோபோட்டை திரும்ப எடுத்து செல்ல ஹீரோ வரும் போது, சூரஜின் வீட்டை விட்டு வெளியேறுகிறார். சுவாரசியமான இந்த கதை மலையாளத்தில் வெளியாகி, திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூலை வாரிக்குவித்தது.

கூகுள் குட்டப்பன்
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீ மேக் தான் கூகுள் குட்டப்பா. கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இணைந்து இந்தப்படத்தை இயக்கி உள்ளனர்.

தர்ஷன், லாஸ்லியா
பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்துள்ள இப்படத்தில், நடிகர் யோகி பாபு லீட் ரோலில் நடித்துள்ளார். தர்ஷனுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்க்கும் மகனாக தர்ஷனும், அவர் காதலிக்கும் இலங்கை தமிழ் பெண் கதாபாத்திரத்தில் லாஸ்லியாவும் நடித்துள்ளார்கள்.
அலை… அலை பாடல்
இந்நிலையில், தற்போது கூகுள் குட்டாப்பா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. அலை.. அலை...அலையென உன்னைக் கண்டேன் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் தீப்தி இனிமையான குரலில் இணைந்து பாடி இந்த பாடலுக்கு அழகு சேர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











