கூகுள் குட்டப்பாவுக்கு கைக்கொடுக்கும் சிவகார்த்திகேயன்... மாஸான அப்டேட்!

சென்னை : இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்து வரும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா லீட் ரோலில் நடிக்கின்றனர்.

யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கூகுள் குட்டப்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார் என்ற முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 மாபெரும் வெற்றி பெற்றது. இதில் சுபின் ஷாஹிர், சுராஜ் சுராஜ் வெஞ்சரமூடு லீட் ரோலில் நடிக்க ரோபோட்டை மையக் கருவாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் ரோபோட்டை வைத்து வித்தியாசமான படங்கள் அவ்வப்போது மட்டுமே ரிலீசாகிறது. அந்த வகையில் இப்போது வித்தியாசமான கதைக்களத்தில் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்க ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25, கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தமிழில் உருவாக இதன் படப்பிடிப்பு கேரளா மற்றும் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இதில் லீட் ரோலில் நடிக்கின்றனர். இதுவரை இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்து வெள்ளிவிழா கண்ட கேஎஸ் ரவிக்குமார் இத்திரைப்படத்தில் வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகன் மற்றும் வயதான அப்பா மட்டும் வாழ்ந்து வரும் வீட்டில் மகன் திடீரென வெளிநாட்டிற்கு வேலை விஷயமாக சென்று விடுகிறார். அதனால் தனிமையில் இருக்கும் அப்பாவிற்கு உதவியாக ரோபோ ஒன்றை அனுப்பி வைக்கிறார். அந்த ரோபோ என்ன சொல்கிறோமோ அதை செய்து முடிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோ ஆகும். வயதான காலத்தில் அப்பாவிற்கு உதவியாக இருக்கும் என மகன் அனுப்பி வைக்க அந்த ரோபோவுக்கு வயதான அப்பாவுக்கும் இடையே ஆரம்பத்தில் மோதிக் கொண்டாலும் போகப்போக இருவரும் உணர்வுபூர்வமாக ஒன்றாகி தந்தை மகனாகவே பழகுகின்றனர்.

கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா

ஒரு கட்டத்தில் அந்த ரோபோவை எடுத்து செல்வதாக மகன் கூற கொடுக்க மறுக்கும் வயதான முதியவருக்கும் ரோபோவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை உணர்ச்சிப் பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அதேசமயம் காமெடி கலந்து கூறியுள்ள இந்த திரைப்படம் மலையாளத்தில் ஹிட் அடித்தது. தமிழில் கே எஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் தமிழில் ரீமேக் செய்து இயக்குகின்றனர். தமிழ் ரசிகர்களுக்காக ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. பெரும்பான்மையான காட்சிகள் எடுக்கப்பட்டு இப்பொழுது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் மற்றும் 2.o ஆகிய படங்களுக்கு பிறகு ரோபோவை வைத்து உருவாகும் படம் கூகுள் குட்டப்பா என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இயக்குனர் எனப் பல அவதாரங்களை எடுத்து வரும் கேஎஸ் ரவிக்குமார் கூகுள் குட்டப்பா படத்தை தனது சொந்த தயாரிப்பில் தயாரித்து வெளியிடுகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார்.

ஆகஸ்ட் 27 ம் தேதி

ஆகஸ்ட் 27 ம் தேதி

அடுத்ததாக டீசர் அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இப்பொழுது அட்டகாசமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. கூகுள் குட்டப்பா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார். அதன்படி ஆகஸ்ட் 27 ம் தேதி மாலை 5:30 மணிக்கு சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட உள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா மற்றும் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்க ரசிகர்கள் இவர்களை அடுத்தடுத்த திரைப்படங்களில் எதிர்பார்த்து உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன் தங்கையாக பழகி வந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இப்பொழுது கூகுள் குட்டப்பா படத்தில் ஜோடியாக நடிக்க இவர்களது கெமிஸ்ட்ரி எவ்வாறு இருக்கும் என்பதைக் காண ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். கூகுள் குட் டப்பா படத்தை முடித்துவிட்டு தர்ஷன் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பை கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டு வெளியாகும்போதே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன் முதல் கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

 சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்

சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்

அதேபோல லாஸ்லியாவும் ஃபிரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்க அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் சதீஷ் இதில் காமெடியனாக வருகிறார். நடிகை லாஸ்லியா மேலும் ஒரு த்ரில்லர் படத்தில் ராட்சசன் பட தயாரிப்பாளரின் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள கூகுள் குட்டப்பா டீசர் அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்க ஆகஸ்டு 27ம் தேதி மாலை 5.30மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிடும் கூகுள் குட்டப்பா படத்தின் டீசர் இணையதளத்தை ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X