‘கூகுள் குட்டப்பன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் தேதி அறிவிப்பு… அப்டேட் கொடுத்த படக்குழு!
சென்னை : கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சுப்பன் திரைப்படம் தமிழில் ரீமேக்காகி வருகிறது.
இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார்,தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தமிழில் ரீமேக் படங்கள்
முன்பெல்லாம் தமிழ் திரைப்படங்கள் தான் பெருமளவில் ரீமேக் செய்யப்பட்டு தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மற்ற மொழிப்படங்களை தமிழில் ரீமேக் செய்வது அதிகரித்து வருகிறது.

த்ரிஷ்யம்
மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இதில் கமல் மற்றும் கௌதமி நடித்திருந்தனர். இப்படம் தமிழிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது த்ரிஷ்யம் இரண்டாவது பாகமும் தமிழில் ரீமேக்காக உள்ளது.

அய்யப்பனும் கோஷியும்
மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பவன் கல்யாண், பிஜூ மேனன் கதாபாத்திரத்திலும் ராணா ப்ரித்விராஜ் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இதன் தமிழ் ரீமேக் உரிமையை வைப் ஸ்டார் கதிரேசன் கைப்பற்றி உள்ளார்.

ஆண்ட்ராய்டு குஞ்சுப்பன்
அதே போல மலையாள மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சுப்பன். ரத்தீஷ் பாலகிருஷ்ணன் படுவள் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றத் திரைப்படம் தான் ஆண்ட்ராய்டு குஞ்சுப்பன். இத்திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

Array
அமெரிக்க படமான Robot & Frank என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். இந்த படத்தின் ஹீரோ சோப்பின் சாஹிர் ரஷ்யாவில் வேலை பார்க்கிறார். ஊரில் தனிமையில் இருக்கும் தனது தந்தை சூரஜை கவனித்துக்கொள்ள ஒரு ரோபோட்டை அனுப்கிறார் ஹீரோ.

சுவாரசியமான கதை
அந்த ரோபோட்டுடன் சூரஜ் நட்பாக பழக ஆரம்பித்து விடுகிறார். ரோபோட்டுக்கு ஜாகதம் பார்ப்பது, உடை மாற்றி விடுவது என அந்த ரோபோட்டுடன் லூட்டி நடிக்க ஆரம்பித்துவிடுகிறார். 4 மாதங்கள் டிரையலாக கொடுக்கப்பட்ட ரோபோட்டை திரும்ப எடுத்துள்ள ஹீரோ வரும் போது, தந்தை வீட்டை விட்டு வெளியேறுகிறார். சுவாரசியமான இந்த கதை மலையாளத்தில் வெளியாக, திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூலை வாரிக்குவித்தது.

கூசூள் குட்டப்பன்
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீ மேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் வாங்கி இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு தமிழில் கூசூள் குட்டப்பன் என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.

ஜிப்ரான் இசை
கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுத ப்ரவீன் ஆண்டனி படத் தொகுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்ஷன், லாஸ்லியா
இப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் யோகி பாபு லீட் ரோலில் நடித்துள்ளார். தர்ஷனுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்க்கும் மகனாக தர்ஷனும், அவர் காதலிக்கும் இலங்கை தமிழ் பெண் கதாபாத்திரத்தில் லாஸ்லியாவும் நடித்துள்ளார்கள்.

ஃபர்ஸ்ட் லுக்
கூகுள் குட்டப்பன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படம் குறித்த முக்கியமான அறிவிப்பை நேற்று கேஎஸ் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 3ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

லாஸ்லியா
சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியாக கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் தயாரிக்கப்பட்டு, இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்து டப்பிங் பணிகளை நடைபெற்று வருகின்றன.
Recommended Video

தர்ஷன் ஹீரோவாக
இதேபோல பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன் மிகப்பெரிய அளவில் பாப்புலரானார். சனம் ஷெட்டி விவகாரத்தில் சிக்கி மாறி மாறி பேட்டி கொடுத்து வந்தார். இவர், தாய்க்குப்பின் தாரம் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











