For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  லாஸ்லியா நடிக்கும் கூகுள் குட்டப்பன்… சூப்பரான அப்டேட் இதோ !

  |

  சென்னை : கூகுள் குட்டப்பன் திரைப்படம் குறித்த முக்கியமான அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட உள்ளது.

  மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சுப்பன் திரைப்படம் தமிழில் ரீமேக்காகி வருகிறது.

  அந்த மேட்டருக்கு நடிகைகளை பிடித்துக் கொடுத்ததே மனைவி தானாம்.. சீக்கிரமே சிக்க வாய்ப்பிருக்காம்!அந்த மேட்டருக்கு நடிகைகளை பிடித்துக் கொடுத்ததே மனைவி தானாம்.. சீக்கிரமே சிக்க வாய்ப்பிருக்காம்!

  இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார்,தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு, மனோபாலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

  ஆண்ட்ராய்டு குஞ்சுப்பன்

  ஆண்ட்ராய்டு குஞ்சுப்பன்

  மலையாளத் திரைத்துறையில் வெவ்வேறு விதமான கதைக்களத்தைக் கொண்டு தரமான திரைப்படங்கள் பல ஆண்டுகளாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் படுவள் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றத் திரைப்படம் தான் ஆண்ட்ராய்டு குஞ்சுப்பன்.

  Array

  Array

  அமெரிக்க படமான Robot & Frank என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். இந்த படத்தின் ஹீரோ சோப்பின் சாஹிர் ரஷ்யாவில் வேலை பார்க்கிறார். ஊரில் தனிமையில் இருக்கும் தனது தந்தை சூரஜை கவனித்துக்கொள்ள ஒரு ரோபோட்டை அனுப்புகிறார் ஹீரோ.

  சுவாரசியமான கதை

  சுவாரசியமான கதை

  அந்த ரோபோட்டுடன் சூரஜ் நட்பாக பழக ஆரம்பித்து விடுகிறார். ரோபோட்டுக்கு ஜாகதம் பார்ப்பது, உடை மாற்றி விடுவது என அந்த ரோபோட்டுடன் லூட்டி அடிக்க ஆரம்பித்துவிடுகிறார். 4 மாதங்கள் டிரையலாக கொடுக்கப்பட்ட ரோபோட்டை திரும்ப எடுத்துக் கொள்ள ஹீரோ வரும் போது, தந்தை விட்டை விட்டு வெளியேறுகிறார். சுவாரசியமான இந்த கதை மலையாளத்தில் வெளியாக, திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூலை வாரிக்குவித்தது.

  கூகுள் குட்டப்பன்

  கூகுள் குட்டப்பன்

  மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீ மேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் வாங்கி இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.

  ஜிப்ரான் இசை

  ஜிப்ரான் இசை

  கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசயமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுத ப்ரவீன் ஆண்டனி படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  தர்ஷன், லாஸ்லியா

  தர்ஷன், லாஸ்லியா

  இப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் யோகி பாபு லீட் ரோலில் நடித்துள்ளார். தர்ஷனுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்க்கும் மகனாக தர்ஷனும், அவர் காதலிக்கும் இலங்கை தமிழ் பெண் கதாபாத்திரத்தில் லாஸ்லியாவும் நடித்துள்ளார்கள்.

  முக்கிய அறிவிப்பு

  முக்கிய அறிவிப்பு

  கூகுள் குட்டப்பன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படம் குறித்த முக்கியமான அறிவிப்பை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  லாஸ்லியா

  லாஸ்லியா

  சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜ்ன் சிங் கதாநாயகனாக நடிக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியாக கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் தயாரிக்கப்பட்டு, இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  தர்ஷன் ஹீரோவாக

  தர்ஷன் ஹீரோவாக

  இதேபோல பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன் மிகப்பெரிய அளவில் பாப்புலரானார். சனம் ஷெட்டி விவகாரத்தில் சிக்கி மாறி மாறி பேட்டி கொடுத்து வந்தார். இவர், தாய்க்குப்பின் தாரம் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். லாஸ்லியாவுக்கும், தர்ஷனுக்கும் இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Google Kuttappan stars KS Ravikumar along with Bigg Boss-fame Tharshan and Losliya. The cast also includes Yogi Babu, Manobala, and Maariappan. The film will have music by Ghibran. movie updates will be released at 6pm today.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X