கூகுள் குட்டப்பன் டீசர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

சென்னை : பிக் பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்துவரும் திரைப்படத்திற்கு கூகுள் குட்டப்பன் என டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 தமிழில் ஆண்ட்ராய்டு குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இப்படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்து வருகிறார்.

முதல் கட்டமாக கேரளா மற்றும் தென்காசியில் படப்பிடிப்பை நடத்தி வந்த படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்பொழுது டீசர் பற்றிய முக்கிய அப்டேட்டை புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

முழு நடிகராக

முழு நடிகராக

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் மெகாஹிட் படங்களை இயக்கிய கே எஸ் ரவிகுமார் இப்பொழுது பல திரைப் படங்களில் நடிகராகவும் வலம் வந்து கொண்டுள்ளார் ஆரம்பத்தில் தான் இயக்கும் திரைப்படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்து தலையைக் காட்டி சென்ற கேஎஸ் ரவிக்குமார் இப்பொழுது முழு நடிகராக மாறி வித்தியாச வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த முத்து மற்றும் படையப்பா போன்ற படங்களின் மூலம் ஓரிரு காட்சிகளில் திரையில் தன்னுடைய முகத்தை காட்டி வந்த கேஎஸ் ரவிக்குமார் இப்பொழுது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பொழுது பிரபல மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் முதன்மை கதாபாத்திரத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

வித்தியாசமான கதை களத்தில்

வித்தியாசமான கதை களத்தில்

மலையாள நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இருக்க கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாக மனிதர்களுக்குள்ளே மட்டுமே பாசம் இருக்கும் என பல படங்களில் காட்டப்பட்டிருக்க ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 படத்தில் முதியவருக்கு ரோபோட் க்கும் இடையே இருக்கும் பாசத்தை மிக அற்புதமாக காமெடி கலந்து ரசிக்க வைக்கும் வகையில் காட்டியிருக்க வித்தியாசமான கதை களத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இவ்வாறு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. வெற்றிகரமான இயக்குனர் மற்றும் நடிகர் என பல முகங்களைக் கொண்டு உள்ள கேஎஸ் ரவிக்குமார் இப்பொழுது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அந்த வகையில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 தமிழில் "கூகுள் குட்டப்பன்" என்ற பெயரில் தயாரிக்கிறார்.

கூகுள் குட்டப்பன்

கூகுள் குட்டப்பன்

கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இப்படத்தை இயக்கி வருகின்றனர். அழகான தமிழில் பேசிக்கொண்டு ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வந்த லாஸ்லியாவை பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த லாஸ்லியா வெற்றி பெற அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் இறுதிச் சுற்றில் வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் வெற்றி பெற்று நீங்கா இடம்பிடித்துள்ள லாஸ்லியாவுக்கு இப்போது அடுத்தடுத்த படங்கள் ஒப்பந்தமாகி வருகிறது. அந்த வகையில் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் லாஸ்லியா அடுத்ததாக கே எஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்து வரும் கூகுள் குட்டப்பன் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

பாஸ் சீசன் 3

பாஸ் சீசன் 3

லாஸ்லியாவுக்கு ஜோடியாக இதில் பிக் பாஸ் தர்ஷன் நடிக்கிறார். லாஸ்லியா பங்கு பெற்ற அதே பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்ற தர்ஷனும் இலங்கையை பூர்வீகமாக கொண்டவராவார். மாடலிங் துறையில் மிகப் பிரபலமாக வலம் வந்த தர்ஷன் பல விளம்பர படங்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனதில் பட்டதை உள்ளது உள்ளபடியே பேசக்கூடிய தர்ஷனுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. தர்ஷனுக்கு பிக் பாஸ் டைட்டிலை வெல்ல அனைத்து தகுதிகள் இருந்தும் ஓட்டுக்கள் அடிப்படையில் இறுதி சுற்றுக்கு முன்பாகவே வெளியேற்றப்பட்டார். இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியாளராக மகுடம் சூடிய தர்ஷனுக்கு மேடையிலேயே கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைப்பதாக உறுதியளித்திருந்தார்.

விரைவில் டீசர்

விரைவில் டீசர்

இந்த நிலையில் கூகுள் குட்டப்பன் படத்தில் ஹீரோவாக தர்ஷன் நடிக்க மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே மலையாளத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தமிழில் ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு கேரளா மற்றும் தென்காசி பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளனர் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அட்டகாசமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக கூகுள் குட்டப்பன் பட டீசரை விரைவில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் டீசர் வெளியாகும் என நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X