Google: 2023ல் உலகளவில் அதிகமாக தேடப்பட்ட படங்கள்.. கூகுள் வெளியிட்ட பட்டியலில் இந்திய படங்கள்!

சென்னை: 2023ம் ஆண்டு தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் சர்வதேச அளவில் பல விஷயங்களை திரையுலகம் சந்தித்துள்ளது.

இந்த ஆண்டில் ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த படங்கள் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் அதிகமாக வெளியாகின.

Google released top searched movies of 2023 list and 3 Indian movies placed in first 10 place

இந்திய அளவில் ஷாருக்கானின் 2 படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. அவரது அடுத்தப்படமான துன்கி படமும் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது.

நிறைவடையும் 2023: இப்பொழுதுதான் துவங்கியதை போல உள்ளது 2023. ஆனால் இன்னும் இரு வாரங்களில் நிறைவடையவுள்ளது. இந்த ஆண்டு மற்ற துறைகளை போலவே திரைத்துறையும் ஏராளமான மாற்றங்கள், வளர்ச்சிகள், வித்தியாசங்கள், முயற்சிகள் என களைகட்டின. இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் கொரானா உள்ளிட்டவற்றை தாண்டி இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டில் இந்திய அளவில் மிகப்பெரிய படங்கள் மட்டுமில்லாமல் ஸ்மால் பட்ஜெட் படங்களும் அதிகமான கவனத்தை பெற்றுள்ளன.

ஷாருக்கானின் பதான் படம்: இந்த ஆண்டில் ஷாருக்கானின் பதான் படம் ஆண்டில் துவக்கத்திலேயே ரசிகர்களை கவரும்வகையில் அமைந்தது. ஷாருக்கான், தீபிகா படுகோன் காம்பினேஷனில் வெளியான இந்தப் படம் ஆண்டின் முதல் 1000 கோடி வசூலை எட்டிய படம் என்ற பெருமையை பெற்ற நிலையில் அடுத்ததாக கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான ஷாருக்கின் ஜவான் படமும் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

துன்கி படம்: இதனிடையே அடுத்த வாரத்தில் ஷாருக்கானின் துன்கி படமும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படமும் ஷாருக்கானின் நடிப்பில் அடுத்த 1000 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கான பிரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. படத்தின் டீசர், டிரெயிலர் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

சிறப்பை பெற்ற ஷாருக்கான் படங்கள்: இந்நிலையில் ஷாருக்கானின் பதான், ஜவான் படங்கள் அடுத்தடுத்த சிறப்புகளை பெற்று வருகின்றன. தற்போது உலகளவில் இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்திய அளவில் ஷாருக்கானின் பதான், ஜவான் மற்றும் கடார் 2 படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திரைப்படங்கள் ரசிகர்களால் கூகுளில் இந்த ஆண்டில் அதிகமாக தேடப்பட்டுள்ளன. முதல் 10 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களால் தேடப்பட்டு முதலிடத்தில் பார்பி படம் இடம்பெற்றுள்ளது.

முதல் 10 படங்களின் பட்டியல்: பார்பியை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் ஓப்பன் ஹெய்மர், ஜவான், சவுண்ட் ஆப் பிரீடம், ஜான் விக் -சாப்டர் 4, அவதார் -தி வே ஆப் வாட்டர், எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ், கடார் 2, கிரீட் 3, பதான் அகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பல விஷயங்களில் கூகுள் தேடலையே மக்கள் அதிகமாக நம்பியுள்ளனர். அந்த வகையில், கூகுள் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய பட்டியல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X