ஹார்வர்டைத் தொடர்ந்து கூகுளை கலக்கிய கமல் ஹாசன்
லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்ற நடிகர் கமல் சமீபத்தில் கூகுள் அலுவலகத்திற்கும் ஒரு விசிட் அடித்திருக்கிறார்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கமல் தொடர்ந்து அங்குள்ள சில முக்கியமான இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்து வருகிறார்.
சமீபத்தில் பாஸ்டன் நகரில் உள்ள கூகுள் அலுவலகத்திற்கு சென்ற கமல் அங்குள்ள ஊழியர்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் உரையாடல்கள் மற்றும் விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களுடன் கமல் நிறைய செல்பிக்களையும் கிளிக்கிக் கொண்டிருக்கிறார். இது குறித்து கமல் "கூகுளை கூகுள் செய்து, சில கூகுளர்களை நிர்வகித்தபோது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் கூகுளின் தலைமையகத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கமலின் இந்த கூகுள் பயணம் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கமலின் இந்த பயணம் குறித்து அவரது ரசிகர் ஒருவர் "எல்லோரும் கூகுள் சென்று எடுத்த போட்டோவை தேடுவார்கள் ஆனால் நீங்கள் கூகுளுக்கு சென்று போட்டோ எடுத்திருக்கிறீர்கள்" என்று பெருமிதம் பொங்க கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











