பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் 2 வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது?

By Mayura Akilan

சென்னை: பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் இரண்டு மோசடிப்புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து விரைவில் அவர் குண்டர் சட்டத்தில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாவைச் சேர்ந்த ரத்தோர், கேரளாவைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் சொத்து விற்பனை மற்றும் கொள்முதலில் முதலீடு செய்யலாம் என்று கூறி சீனிவாசன் மோசடி செய்ததாக போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.

Power Star

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு 10 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.65 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சீனிவாசன் மீது புகார் எழுந்தது. இதேபோல் கோவாவை சேர்ந்த வில்சனிடம் ரூ.3 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.15 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார் சீனிவாசன்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடையாறு பகுதியில் வசித்து வரும் ஜெகநாதன் என்பவர் 5 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்றுக்கொண்டு சீனிவாசன் ஏமாற்றிவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் கொடுத்திருந்தார். இது பற்றி அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனரை விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகவும் நடிகர் சீனிவாசன் மீது புகார் தெரிவிக்கப்பட்டன.

இப்போது கோவாவைச் சேர்ந்த ரத்தோர், கேரளாவைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் சொத்து விற்பனை மற்றும் கொள்முதலில் முதலீடு செய்யலாம் என்று கூறி சீனிவாசன் மோசடி செய்ததாக போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஏற்கனவே 2 மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்து 'லட்டு தின்று கொண்டிருக்கும்' நடிகர் சீனிவாசன் மீது மேலும் மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எனவே விரைவில் இந்த வழக்குகளிலும் அவர் கைது செய்யப்படுவார் என்றும் இம்முறை அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் கூறப்படுகிறது.

சந்தானத்துடன் லண்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து வரும் பவர் ஸ்டார், சிறையில் அடைபட்டு களி திண்பாரா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X