கிரவுட் ஃபன்டிங் முறையில் படத்தை தயாரிக்க இருக்கும் கோபி சுதாகர் .
சென்னை : இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்குமே தெரியும் கோபி சுதாகரின் பரிதாபங்கள் வீடியோக்கள் பற்றி .இணையத்தில் பரிதாபங்கள் வீடியோக்கள் மூலம் ஒரு டிரென்டையே கொண்டு வந்தவர்கள் இவர்கள் .
முதலில் மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யூடியூப் பக்கத்தின் கீழ் வேலை பார்த்தவர்கள் அதற்கு பிறகு ,தாங்களே பரிதாபங்கள் எனும் யூடியூப் பக்கத்தை துவங்கினர் .தற்போது இவர்களுக்கு பதினேழு லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த யூடியூப் பக்கத்திற்கு இருக்கிறார்கள் .

நீண்ட நாட்களாக கோபி மற்றும் சுதாகர் தங்களது வீடியோக்களில் தாங்கள் இனைந்து ஒரு படத்தை தயாரிக்க போவதாகவும் அதை எங்கள் குழுவில் ஒருவர் இயக்க போகிறார் என்றும் கூறினார்கள், அந்த படத்திற்கு கிரவுட் ஃபன்டிங் என்ற முறையில் வீடியோக்களின் மூலம் விளம்பரம் செய்து அதற்கான பணத்தை சேகரித்து வந்தனர் .

அதற்கு பிறகு சில நாட்கள் கழித்து சில வீடியோக்களில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் வந்து விட்டது ,எங்களை நம்பி இவ்வளவு பணம் கொடுத்தற்கு மிக்க நன்றிகள் என்று கூறிவந்தனர் ,மேலும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் போய் கொண்டு இருக்கிறது படத்தை பற்றிய அப்டேட் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறிவந்தனர் .

தற்போது படத்தை பற்றிய அப்டேட்டை கூறி உள்ளனர் கோபி மற்றும் சுதாகர் .சமீபத்தில் வெளியான அரசியல் பாவங்கள் வீடியோவின் இறுதியில் இந்த அப்டேட்டை தெரிவித்துள்ளனர் .அது படத்தின் தயாரிப்பாளர்கள் அஃதாவது படத்தை தயாரிக்க பணம் தந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேலானவர்கள் இதனால் நாங்கள் ' பரிதாபங்கள்' என்ற ஆப்பை (செயலி)வெளியிட்டு இருக்கிறோம் ,இந்த ஆப்பின் மூலம் பணம் போட்டவர்கள் உள்நுழைந்து பரிதாபங்கள் மூலம் தயாரிக்கப்படும் இப்படத்தின் அனைத்து வித அப்டேட்டை பிரத்யேகமாக தெரிந்து கொள்ளலாம் ,நாங்கள் எப்போது படத்தின் தலைப்பை அறிவிக்க போகிறோம் ,படம் தயாரிப்பு எந்த நிலையில் உள்ளது ,எங்களின் யூடியூப் வீடியோக்கள் எந்த நிலையில் உள்ளது ,எங்கள் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது போன்ற எல்லா விசயங்களையும் தயாரிப்பாளரான நீங்கள் இந்த பரிதாபங்கள் ஆப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார்கள் இந்த யூடியூப் நாயகர்களான கோபி மற்றும் சுதாகரும் .


Click it and Unblock the Notifications











