கருப்பர் நகரத்தை தூசி தட்டுகிறாரா கோபி நயினார்?
Recommended Video

கதை திருட்டு வழக்கு மூலம்தான் கோபி நயினார் வெளியுலகுக்கு தெரிய வந்தார். முதலில் மெட்ராஸ் படத்தை தனது கருப்பர் நகரம் படத்தின் காப்பி என்றார். பின்னர் கத்தி கதை பஞ்சாயத்தை எடுத்தார். இப்படி பிரபலமானவருக்கு அறம் என்னும் படத்தை இயக்க வாய்ப்பளித்து நல்ல அடையாளத்தை வழங்கினார் நயன்தாரா.
அறம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்ததை அடுத்து கோபிக்கு வாய்ப்புகள் குவிகின்றன. நயன்தாரா நடிப்பிலேயே அறம் பார்ட் 2 இயக்கவிருக்கிறார். அதற்கு முன்பாக தன்னுடைய ட்ராப் ப்ராஜக்ட் ஆன கருப்பர் நகரத்தை இயக்கப்போகிறாராம். சித்தார்த் நடிப்பில் ஒரு படம் இயக்கவிருந்தார் கோபி. அந்த படம் ட்ராப் ஆனதை தொடர்ந்து அதே கதையை ஜிவி பிரகாஷை வைத்து இயக்கவிருக்கிறாராம். இதுதான் கருப்பர் நகரம் கதை என்கிறார்கள்.

ட்ராப் ஆன கருப்பர் நகரம் படப்பிடிப்பில் நடித்தவர் கல்லூரி அகில். அவர் தற்போது சமீபத்தில் வெளியான படைவீரன் படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











