Don't Miss!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- News
காதலுக்கு எல்லை கிடையாது.. கடல் கடந்த காதல்.. ஹாங்காங் பெண்ணை மணந்த புதுக்கோட்டை இளைஞர்
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Finance
அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கீர்த்தி சுரேஷா? சமந்தாவா? ’அறம் 2’வில் யார் ஹீரோயின்.. இயக்குநர் கோபி நயினார் விளக்கம்!
சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் அடுத்த பாகம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Recommended Video
மூடப்படாமல் அப்படியே விட்டுச் செல்லப்படும் ஆழ்த்துளை கிணறுகளால் நிகழும் மரணங்கள் குறித்து 2017ம் ஆண்டு இயக்குநர் கோபி நயினார் இயக்கிய படம் தான் அறம்.
அறம் 2ம் பாகத்தில் நயன்தாராவிற்கு பதிலாக நடிகை கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தா நடிக்கப் போவதாக பரவி வரும் தகவலுக்கு கோபி நயினார் விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்த
இரும்புத்திரையா?
விஷுவல்ஸ்
எல்லாம்
தெறிக்குது..
விஷாலின்
சக்ரா
படத்தின்
டிரைலர்
ரிலீஸ்!

அறம்
கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா, ராமசந்திரன் துரைராஜ், சுனு லட்சுமி, வினோதினி, வேல ராமமூர்த்தி, ரமேஷ், விக்னேஷ், ராமதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அறம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

குழந்தை சுஜித்
ஆழ்த்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து சிக்கிக் கொண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஆண்டு மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித் ஆழ்த்துறை கிணற்றில் சிக்கித் தவித்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு முன்னதாகவே அதுபோன்ற கதையை மையப்படுத்தி எடுத்த படம் தான் அறம்.

கெத்தான கலெக்டர்
லேடி சூப்பர்ஸ்டார் என்ற பெயருக்கு செட்டாகும் வகையில் அறம் படத்தில் கெத்தான கலெக்டர் ரோலில் நடித்து அசத்தி இருப்பார் நடிகை நயன்தாரா. நல்ல கதைக்கு நயன்தாரா அளித்த ஈடுபாடு மற்றும் முயற்சியின் காரணமாகத் தான் அந்த படமே உருவாகி இருந்தது. ராக்கெட் விடும் நாட்டில், ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற முடியாத சூழலை சாட்டையடியாக சொல்லி இருப்பார்.

அறம் 2
அறம் படத்தின் இறுதியில் கலெக்டர் பதவி பறிபோகும் நிலையில், இதற்கும் மேலான பதவியை தான் அடையப்போவதாக கெத்தாக கூறிவிட்டு விசாரணை கமிஷனில் இருந்து வெளியே நடந்து வருவார் நடிகை நயன்தாரா. இந்நிலையில், அறம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

யார் ஹீரோயின்
பெண்குயின் ஓடிடி தளத்தில் ரிலீசான நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போகிறார் என்ற வதந்தி ஒன்று வைரலாகி வருகிறது. அதே போல நடிகை சமந்தாவின் பெயரும் அறம் 2 படத்திற்காக அடிபட்டு வருகிறது. இதுகுறித்து, இயக்குநர் கோபி நயினாரே விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் திட்டவட்டம்
கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தாவின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குநர் கோபி நயினார், நயன்தாரா இல்லாமல் 'அறம் 2' படம் எப்போதுமே உருவாகாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், அறம் 2ம் பாகத்தின் கதை முதல் பாகத்தை விட அழுத்தமாகவும் ஆழமாகவும் இருக்கும், நயன்தாராவை தவிர்த்து யாரும் தன் மனதில் இல்லை என்றும் தெளிவுபடுத்தி விளக்கி உள்ளார்.