லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்த கோபி, சுதாகர், சிவகார்த்திகேயன்?.. Tag Team போட்ருக்காங்களோ

சென்னை: கோபியும், சுதாகரும் பரிதாபங்கள் புரொடகஷன்ஸ் மூலம் ஓ காட் ஃபியூட்டிஃபுல் என்ற படத்தை தயாரித்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தை விஷ்ணு விஜயன் இயக்கியிருக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியானது. சிவகார்த்திகேயன் அந்தப் பாடலை பாடியிருந்தார். சூழல் இப்படி இருக்க மூன்று பேரும் சேர்ந்து அந்தப் பாடலில் லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்திருப்பதாக பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்கள் கோபி, சுதாகர். தங்களது ஒவ்வொரு வீடியோவிலும் ஏதோவொரு சம்பவத்தை செய்வதில் அவர்கள் வல்லவர்க்ள். லட்டு பாவங்கள், வடக்கன் பாவங்கள் என அவர்கள் போட்ட அத்தனை வீடியோக்களுமே பட்டித்தொட்டியெங்கும் பரவின. சமீபத்தில்கூட அவர்கள் வெளியிட்ட சொசைட்டி பாவங்கள் என்ற வீடியோ பெரும்பாலானோரிடம் பரவலான வரவேற்பை பெற்றிருந்தது.

என்ன வீடியோ அது?: அதாவது நெல்லையில் கவின் என்ற பட்டியலின் இளைஞரை சுர்ஜித் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்தார். அதனை கண்டிக்கும் விதமாகவும்; ஆதிக்க சாதியினரில் சிலர் எப்படி தன் சாதி இளைஞர்களை மூளை சலவை செய்து தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள் என்பது குறித்து கிண்டலாக பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ அவர்களது கரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Gopi Sudhakar and Sivakarthikeyan have come together to tease Lokesh Kanagaraj
Photo Credit:

ஆதரவு, எதிர்ப்பும்: இந்த வீடியோவுக்கு எந்த அளவு ஆதரவு எழுந்ததோ அதே அளவு சாதி வெறியர்களால் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. முதலில் தயாரிப்பாளர் சௌத்ரி என்பவர் கோபிக்கும், சுதாகருக்கும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். பிறகு வழக்கறிஞர் ஒருவர் அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்தார். இவர்கள் தவிர்த்து இன்னும் சிலரும்; அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்று குரல்களை எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

பரிதாபங்களின் படம்: இது ஒருபக்கம் இருக்க பரிதாபங்கள் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி Oh God Beautiful என்ற படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதனை விஷ்ணு விஜயன் என்பவர் இயக்கியிருக்கிறார். ஜேசி ஜோ இசையமைத்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க படத்தின் முதல் சிங்கிளான வேணும் மச்சா பீஸ் என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

லோகேஷை கிண்டல் செய்தார்களா?: இந்நிலையில் அந்தப் பாடலில் ஒரு விஷயத்தை ரசிகர்கள் டீகோட் செய்திருக்கிறார்கள். அதாவது அதில், 'பார்த்த படத்தின் ஃப்ளாஷ்பேக்கும் Fake' என்ற ஒருவரி வருகிறது. இதனை கவனித்த பலரும்; லியோ படத்தில் பிளாஷ்பேக் ஃபேக் என்று லோகேஷ் கனகராஜ் பேட்டிகளில் தெரிவித்திருந்தார். அதனை வைத்து அவரை இப்படி மூன்று பேரும் கிண்டல் செய்துவிட்டார்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X