மனைவியை விவாகரத்து செய்ய இவர்தான் காரணமா? பிரபல பாடகியுடன் இசை அமைப்பாளர் ரொமான்டிக் போட்டோ ஷூட்!
சென்னை: பிரபல இசை அமைப்பாளர் தனது காதலியுடன் இருக்கும் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் சமீபகாலமாக விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. சினிமா, மட்டுமின்றி சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியிலும் இது அதிகரித்து வருகிறது.
மலையாள சினிமாவில் இது இன்னும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடிகை மேக்னா வின்சென்ட் விவாகரத்து செய்தார்.

விவாகரத்து
இப்போது பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பாடகியை மணக்க இருக்கிறார். மலையாளத்தில் பிரபல இசை அமைப்பாளரான கோபி சுந்தர், பிருத்விராஜ் நடித்த அன்வர், துல்கர் சல்மான் நடித்த உஸ்தாத் ஓட்டல், மல்லு சிங், 5 சுந்தரிகள், எஸ்கேப் பிரம் உகாண்டா, பெங்களூர் டேஸ் உட்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

பெங்களூர் நாட்கள்
தமிழில், பொய் சொல்லப்போறோம், யாருடா மகேஷ்?, பெங்களூர் நாட்கள், அஞ்சல, தோழா, தேவி உட்பா பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தெலுங்கில், வேர்ல்ட் பேமஸ் லவ்வர், நிசப்தம் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இப்போதும் இசை அமைத்து வருகிறார். மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

இரண்டு குழந்தைகள்
இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மாதவ், யாதவ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பிரியாவுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, பிரிந்து வாழ்ந்தனர். இப்போது விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

ரொமான்டிக் போட்டோ
இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி அபயா ஹிரண்மயியை, கோபி சுந்தர் காதலித்து வருகிறார். இதை கோபி சுந்தர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் காதலி அபயாவுடன் இருக்கும் ரொமான்டிக் போட்டோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், கோபி சுந்தர். அதில் 'நான் வெளியேற நீதான் காரணம்' என்று கூறியுள்ளார்.
Recommended Video

வாழ்த்துகள்
இதற்கு ரசிகர்கள், மனைவியை விவாகரத்து செய்ய இவர்தான் காரணம் என்று கூறி வருகின்றனர். 'விவாகரத்துக்குப் பின்னால் உள்ள நபரை பற்றி யாரும் சொல்வதில்லை. ஆனால் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்' என்று சிலர் தெரிவித்துள்ளார். இன்னும் சிலர், இந்த காதலாவது நிலைத்திருக்கட்டும்' என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











