ஹேய் மணி கம் டுடே கோ டுமாரா.. இப்படியும் ஒரு படம் பாஸ்
Recommended Video
சென்னை: படங்களுக்கு நூதனமாக பெயர் வைப்பதில் கின்னஸ் சாதனை என்று வைத்தால் அதில் தமிழ் சினிமாக்காரர்களுக்குத்தான் முதலிடம் கிடைக்கும். அப்படி போட்டு பொளந்து கட்டுகிறார்கள் தலைப்பில்.
யூடியூபில் ரொம்பப் பிரபலமாக இருப்பவர்கள் இப்போதெல்லாம் சினிமாவுக்கும் அப்படியே தாவி விடுகிறார்கள். விக்னேஷ் காந்த் ஒரு உதாரணம். அந்த வரிசையில் கோபி சுதாகர் இணையவுள்ளனர்.
இவர்களின் காமெடி கலாட்டாவைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட கோபி சுதாகரும் இப்போது சினிமா குளத்தில் குதித்துள்ளனர். அவர்கள் நடித்துள்ள படம்தான் ஹேய் மணி கம் டுடே கோ டுமாரோ.

கிளவுட் பன்டிங் முறையில் நிதி வசூல் செய்து இந்தப் படத்தை இவர்கள் எடுத்து இவர்களே நடிக்கின்றனர். ஹீரோயின் உள்ளிட்ட விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. அசத்துங்க பாஸ்களா.
தனுஷ் அடுத்த படம் 44. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ளது. இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும். அதேசமயம், இப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறிக் காணப்படுகின்றன.
சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள ஹீரோ ரசிகர்களை மகிழ்விக்க தியேட்டர்களுக்கு வருகிறது. இது சூப்பர் ஹீரோ மாதிரியான படம். சிறு வயதில் ஹீரோவாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன் எப்படி அதுவாக மாறுகிறார் என்பதே கதை. படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளதாம்.
வாழ் என்று ஒரு படம். இதில் நடிக்கும் எல்லோருமே புதுமுகங்கள்தான். கவின் நண்பர் பிரதீப் ஆண்டனி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிறது வாழ். இப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுமுகங்களை வாழ வைக்கும் சிவகார்த்திகேயன் பாராட்டப்பட வேண்டியவர்தான்.
மலையாளத்தில் மோகன்லால் திரிஷா இணைகிறார்கள். கணவன் மனைவியாக புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். ஜித்து ஜோசப் இயக்குகிறார். ஒரு வாரத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்குதாம். திரிஷாவின் அலை மலையாளத்திலும் கலக்கட்டும்.


Click it and Unblock the Notifications











