ரஜினிகாந்தின் 'அண்ணாத்தே'வில் மெயின் வில்லனாக நடிக்கிறாரா..? என்ன சொல்கிறார் இந்த தெலுங்கு ஹீரோ?

By

சென்னை: ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிப்பது பற்றி பிரபல தெலுங்கு ஹீரோ விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம், தர்பார். இதில் அவர் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் படம், அண்ணாத்தே.

நயன்தாரா

நயன்தாரா

சிறுத்தை சிவா இயக்குகிறார். இது ரஜினிகாந்துக்கு 168-வது படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி, ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்தது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை கொல்கத்தா, புனே உள்ளிட்ட வட மாநிலங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கொரோனா உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கியுள்ளது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகரித்து வருகிறது

அதிகரித்து வருகிறது

இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 507 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கோபிசந்த்

கோபிசந்த்

இந்தப் பிரச்னை முழுமையாக முடிந்த பிறகுதான் சினிமா, டிவி படப்பிடிப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்கிடையே, ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ கோபிசந்த் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இவர், தமிழில், ஜெயம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

நடிக்கவில்லை

நடிக்கவில்லை

இந்நிலையில் தான் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார், கோபிசந்த். இயக்குனர் சிறுத்தை சிவா என் நண்பர். அண்ணாத்தே படத்துக்குப் பிறகு அவர் என்னை வைத்து படம் இயக்க உள்ளார். எனக்காக அவர் கதை உருவாக்க இருக்கிறார். இந்த தகவலை சிலர் தவறாகக் கூறி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X