twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாய்னா, சிந்துவின் சாம்பியன் மாஸ்டரின் வாழ்க்கை படமாகிறது!

    By Vignesh Selvaraj
    |

    ஐதராபாத் : இந்தியாவின் பிரபல பேட்மின்டன் சாம்பியனும், நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோரின் பயிற்சியாளருமான கோபிசந்தின் வாழ்க்கை சினிமாவாகிறது.

    முன்னாள் பேட்மின்டன் வீரரான கோபிசந்த் ஓபன் பேட்மின்டன் சாம்பியனகி இந்தியாவறிகுப் பெருமை சேர்த்தவர். இவரது வாழ்க்கை இப்போது சினிமாவாகத் தயாராகிறது.

    ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் அபுண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார்கள்.

    பேட்மின்டன் சாம்பியன்

    பேட்மின்டன் சாம்பியன்

    ஆந்திர மாநிலத்தில் 1973-ம் ஆண்டு பிறந்த கோபிசந்த், சிறுவயதில் கிரிக்கெட்டின் மீது தான் தீவிரக் காதல் கொண்டவராக இருந்தாராம். பிறகு, இந்தியாவின் சிறந்த பேட்மின்டன் வீரராக மாறி, 2001-ம் ஆண்டு இங்கிலாந்தின் பெருமைமிக்க ஒபன் பேட்மின்டன் சாம்பியன் விருதை தட்டி வந்து பெருமை சேர்த்தார்.

    பயிற்சியாளர் கோபிசந்த்

    பயிற்சியாளர் கோபிசந்த்

    இந்தியாவுக்குப் பல பெருமைகளை தேடித்தந்த கோபிசந்த், 2003-ம் ஆண்டு பேட்மின்டனில் இருந்து ஓய்வு பெற்று, ஐதராபாத்தில் புல்லேலா கோபிசந்த் பேட்மின்டன் அகாடெமியை துவங்கினார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சூப்பர் சீரீஸ் ரெக்கார்ட் செய்த ஸ்ரீகாந்த் கிடம்பி ஆகியோர் கோபிசந்திடம் பயிற்சி பெற்றவர்கள்தான்.

    கோபிசந்த் பயோபிக்

    கோபிசந்த் பயோபிக்

    திறமைவாய்ந்த பயிற்சியாளர் கோபிசந்தின் விளையாட்டு மற்றும் குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் இந்தி என இரு மொழிகளில் பயோபிக் எடுக்கிறார்கள். இதற்கான திரைக்கதைப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 2018-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

    பெருமை அடைகிறேன்

    பெருமை அடைகிறேன்

    'பேட்மின்டன் தற்போது இந்தியாவில் எல்லா மக்களிடமும் சென்று சேர்ந்திருப்பதும், குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டின் மீது ஆர்வம் காட்டுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவதன் மூலம் பல்வேறு கனவுகளில் இருக்கும் பலரை ஊக்கப்படுத்த முடியும் என்பதில் பெருமை அடைகிறேன்' என தனது பயோபிக் பற்றிக் கூறியிருக்கிறார் கோபிசந்த்.

    English summary
    India's famous badminton champion and star badminton players like Saina Nehwal and PV Sindhu's coach Gopi chand's life will became a biopic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X