»   »  கோபிகா தந்தைக்கு சரமாரி அடி!

கோபிகா தந்தைக்கு சரமாரி அடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை கோபிகாவின் தந்தையை ரவுடிக் கும்பல் கோபிகா கண் முன்னாலேயே சரமாரியாக அடித்து உத்ைததால்பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை கோபிகாவின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். இங்குள்ள ஒரு தியேட்டருக்கு கோபிகா, அவரதுதந்தை, தாயார், தங்கை ஆகியோர் படம் பார்க்கச் சென்றனர்.

அப்போது, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஒன்றில் சபீர் என்பவர் அமர்ந்திருந்தார். அவரைஎழுந்திருக்குமாறு கோபிகாவின் தந்தை கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கிடையே வாக்குவாதம்ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சபீர் தனது செல்போன் மூலம் தனது நண்பர்களை தியேட்டருக்கு வரச் சொன்னார்.அவர்கள் வந்தவுடன், அத்தனை பேருமாக சேர்ந்து கோபிகாவின் தந்தையை குண்டுக்கட்டாக தூக்கிதியேட்டருக்கு வெளியே கொண்டு வந்தனர்.

அங்கு வைத்து கோபிகாவின் தந்தையை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதைப் பார்த்து கோபிகா, தாயார்,தங்கை ஆகியோர் கதறி அழுதனர். உதவி கோரி குரல் எழுப்பினார்கள். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.

இந்த சம்பவம் குறித்து கோபிகா சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த கோபிகாவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீட்டுக்குஅழைத்துச் செல்லப்பட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil