»   »  அதிர்ஷ்டவசமாய் உயிர் தப்பிய கோபிகா! கேரள மாநிலம் ஆலப்புழை கடலோரப் பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகை கோபிகாவையும், மலையாள நடிகர்திலீப்பையும் மிகப் பெரிய கடல் அலை இழுத்துச் சென்றது.அதிர்ஷ்டவசமாக இன்னொரு அலை வந்து அவர்களை கரையில் தூக்கி வீசியதால் இருவரும் உயிர் தப்பினர்.கோபிகா, சாந்துபொட்டு என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் கோபிகாவுக்கு ஜோடியாக திலீப் நிடிக்கிறார்.லால் ஜோஸ் என்பவர் படத்தை இயக்கி வருகிறார்.இப் படத்தின் படப்பிடிப்பு ஆலப்புழையில் நடந்தது. கடற்கரையில் திலீப்பும், கோபிகாவும் படுத்து உருளுவது போல காட்சிவைக்கப்பட்டிருந்தது. தனக்கு நீச்சல் தெரியாது, எனவே இந்தக் காட்சியை மாற்றி அமைக்க முடியுமா என்று கோபிகாகேட்டுள்ளார்.ஆனால் பரவாயில்லை, ஒன்றும் ஆகாது என்று அவரைத் தைரியப்படுத்தி கடலுக்குள் இறக்கி விட்டார் இயக்குனர் லால்ஜோஸ்.அப்போது எதிர்பாராதவிதமாக மிகப் பெரிய அலை வந்து கோபிகாவையும், திலீப்பையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.இதை எதிர்பாராத படக்குழுவினர் பீதியில் உறைந்தனர். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே இன்னொரு அலை வந்துஇருவரையும் கரையில் தூக்கிப் போட்டு விட்டுச் சென்றது.கடல் நீரை குடித்து விட்டதால் இருவரும் மயக்கமடைந்திருந்தனர். இதையடுத்து உடனடியாக இருவரையும்மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் .சிகிச்சை அளிக்கபட்ட பிறகு இருவரும் கண் விழித்தனர்.இந்த சம்பவம் குறித்து கோபிகா கூறுகையில், மறு பிறவி எடுத்துள்ளேன். இந்தக் காட்சியில் நடிக்க நான் பயந்தேன். நான்பயந்தது போலவே ஆகி விட்டது. நல்ல வேளையாக கடவுள் காப்பாற்றி விட்டார் என்று பயம் நீங்காத முகத்துடன் கூறினார்.

அதிர்ஷ்டவசமாய் உயிர் தப்பிய கோபிகா! கேரள மாநிலம் ஆலப்புழை கடலோரப் பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகை கோபிகாவையும், மலையாள நடிகர்திலீப்பையும் மிகப் பெரிய கடல் அலை இழுத்துச் சென்றது.அதிர்ஷ்டவசமாக இன்னொரு அலை வந்து அவர்களை கரையில் தூக்கி வீசியதால் இருவரும் உயிர் தப்பினர்.கோபிகா, சாந்துபொட்டு என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் கோபிகாவுக்கு ஜோடியாக திலீப் நிடிக்கிறார்.லால் ஜோஸ் என்பவர் படத்தை இயக்கி வருகிறார்.இப் படத்தின் படப்பிடிப்பு ஆலப்புழையில் நடந்தது. கடற்கரையில் திலீப்பும், கோபிகாவும் படுத்து உருளுவது போல காட்சிவைக்கப்பட்டிருந்தது. தனக்கு நீச்சல் தெரியாது, எனவே இந்தக் காட்சியை மாற்றி அமைக்க முடியுமா என்று கோபிகாகேட்டுள்ளார்.ஆனால் பரவாயில்லை, ஒன்றும் ஆகாது என்று அவரைத் தைரியப்படுத்தி கடலுக்குள் இறக்கி விட்டார் இயக்குனர் லால்ஜோஸ்.அப்போது எதிர்பாராதவிதமாக மிகப் பெரிய அலை வந்து கோபிகாவையும், திலீப்பையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.இதை எதிர்பாராத படக்குழுவினர் பீதியில் உறைந்தனர். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே இன்னொரு அலை வந்துஇருவரையும் கரையில் தூக்கிப் போட்டு விட்டுச் சென்றது.கடல் நீரை குடித்து விட்டதால் இருவரும் மயக்கமடைந்திருந்தனர். இதையடுத்து உடனடியாக இருவரையும்மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் .சிகிச்சை அளிக்கபட்ட பிறகு இருவரும் கண் விழித்தனர்.இந்த சம்பவம் குறித்து கோபிகா கூறுகையில், மறு பிறவி எடுத்துள்ளேன். இந்தக் காட்சியில் நடிக்க நான் பயந்தேன். நான்பயந்தது போலவே ஆகி விட்டது. நல்ல வேளையாக கடவுள் காப்பாற்றி விட்டார் என்று பயம் நீங்காத முகத்துடன் கூறினார்.

Subscribe to Oneindia Tamil

கேரள மாநிலம் ஆலப்புழை கடலோரப் பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகை கோபிகாவையும், மலையாள நடிகர்திலீப்பையும் மிகப் பெரிய கடல் அலை இழுத்துச் சென்றது.

அதிர்ஷ்டவசமாக இன்னொரு அலை வந்து அவர்களை கரையில் தூக்கி வீசியதால் இருவரும் உயிர் தப்பினர்.

கோபிகா, சாந்துபொட்டு என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் கோபிகாவுக்கு ஜோடியாக திலீப் நிடிக்கிறார்.லால் ஜோஸ் என்பவர் படத்தை இயக்கி வருகிறார்.

இப் படத்தின் படப்பிடிப்பு ஆலப்புழையில் நடந்தது. கடற்கரையில் திலீப்பும், கோபிகாவும் படுத்து உருளுவது போல காட்சிவைக்கப்பட்டிருந்தது. தனக்கு நீச்சல் தெரியாது, எனவே இந்தக் காட்சியை மாற்றி அமைக்க முடியுமா என்று கோபிகாகேட்டுள்ளார்.

ஆனால் பரவாயில்லை, ஒன்றும் ஆகாது என்று அவரைத் தைரியப்படுத்தி கடலுக்குள் இறக்கி விட்டார் இயக்குனர் லால்ஜோஸ்.

அப்போது எதிர்பாராதவிதமாக மிகப் பெரிய அலை வந்து கோபிகாவையும், திலீப்பையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.இதை எதிர்பாராத படக்குழுவினர் பீதியில் உறைந்தனர். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே இன்னொரு அலை வந்துஇருவரையும் கரையில் தூக்கிப் போட்டு விட்டுச் சென்றது.

கடல் நீரை குடித்து விட்டதால் இருவரும் மயக்கமடைந்திருந்தனர். இதையடுத்து உடனடியாக இருவரையும்மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் .சிகிச்சை அளிக்கபட்ட பிறகு இருவரும் கண் விழித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோபிகா கூறுகையில், மறு பிறவி எடுத்துள்ளேன். இந்தக் காட்சியில் நடிக்க நான் பயந்தேன். நான்பயந்தது போலவே ஆகி விட்டது. நல்ல வேளையாக கடவுள் காப்பாற்றி விட்டார் என்று பயம் நீங்காத முகத்துடன் கூறினார்.


Read more about: gopika escapes miraculously

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil