"கண்ணான கண்ணே".. பாடலை அழகாக கிட்டாரில் வாசித்த கோபிநாத்தின் மகள்!

சென்னை : விஜய் டி.வி புகழ் கோபிநாத்தின் மகள் கிட்டார் வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

'கண்ணான கண்ணே'.. பாடலை அழகாக கிட்டாரில் வாசித்த கோபிநாத்தின் மகள்! - வீடியோ

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வரும் நீயா நானா அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சி அதில் வரும் கோபிநாத் மிகவும் பிரபலம். பலராலும் அறியப்படும் பிரபலம் என்றே சொல்லலாம்.

Gopinath daughter venba play guitar

இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதை தாண்டி எழுத்தாளர், செய்தியாளர், பேச்சாளர் என பல திறமைகளை கொண்டவர். ஆரம்ப காலத்தில் ராஜ் தொலைக்காட்சியில் வேலை செய்த இவர் பின் ஸ்டார் விஜய் சேனலில் சேர்ந்தார்.

மக்கள் யார் பக்கம் என்ற ஸ்டார் விஜயின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் ரேடியோ ஜாக்கியாகவும் ரேடியோ சிட்டியில் பணிபுரிந்தார். இவர் ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார், அதில் "ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க" என்ற புத்தகம் பெரிதும் பிரபலமானது.

Gopinath daughter venba play guitar

பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த இவர் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். "நிமிர்ந்து நில்"படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் துர்கா என்பவரை திருமணம் செய்தார். இப்போது அவருக்கு அன்பான பெண் குழந்தை உள்ளது.

Gopinath daughter venba play guitar

தற்போது தன் மகள் வெண்பா கிட்டார் வாசிக்கும் வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்"கண்ணான கண்ணே"பாடலை வாசித்துள்ளார். நல்ல பாடல்களை தேர்ந்து எடுத்து வாசிப்பது வெண்பாவின் வழக்கமாம், அப்பா பேச்சாளர் அதே போல மகளும் விரைவில் நிறைய மேடைகளில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gopinath daughter venba play guitar

ஆனால் இசையுடன் பேச கூடிய தனி திறமை இருக்கும் இருக்கு என்று சொல்லலாம். எப்படியோ வெண்பாவின் வெற்றிகள் தொடரட்டும், கோட்டு கோபியின் மகள் பல கோட்டைகள் கட்ட வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X