For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அம்மனா எவ்ளோ அழகா இருக்காங்க நயன்தாரா.. நீட், மத அரசியல் என தெறிக்குது மூக்குத்தி அம்மன் டிரைலர்!

  |

  சென்னை: நாட்டில் நடக்கும் மத அரசியலை அழிக்க அம்மனே நேரில் இறங்கி வந்தா எப்படி இருக்கும் என்கிற கதையை மூக்குத்தி அம்மனாக இயக்கி உள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் நடுவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் இந்த டிரைலர் வெளியாகி உள்ளது.

  ட்விட்டரில் #MookuthiAmmanTrailer வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

  ப்பா எப்படி முறைக்குது அர்ச்சனா.. கமல் வச்சு விளாசியதும் கோபம் பொத்துக்கிட்டு வருதே.. தேவைதான்!ப்பா எப்படி முறைக்குது அர்ச்சனா.. கமல் வச்சு விளாசியதும் கோபம் பொத்துக்கிட்டு வருதே.. தேவைதான்!

  அழகு அம்மன்

  அழகு அம்மன்

  தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயா, ரம்யா கிருஷ்ணன், மீனா என எத்தனையோ நடிகைகளை அம்மன் வேடத்தில் பார்த்துள்ளோம். இப்போ நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக எவ்ளோ க்யூட்டா அழகா இருக்காங்கன்னு டிரைலரில் வரும் ஒவ்வொரு ஃபிரேமும் சொல்கிறது.

  அடுத்த எல்.கே.ஜி

  அடுத்த எல்.கே.ஜி

  ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி திரைப்படம் காமெடி மற்றும் அரசியல் நய்யாண்டி படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில், மூக்குத்தி அம்மன் அடுத்த எல்.கே.ஜி ஆக இருக்கும் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. இயக்குநராகவும் கலக்கி விட்டார் பாலாஜி என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

  மத அரசியல்

  மத அரசியல்

  கடவுளை வைத்து நடக்கும் பிசினஸை மலையாளத்தில் வெளியான ஃபகத் ஃபாஸிலின் டிரான்ஸ் படம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருந்தது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியான பிகே படமும் மதத்தின் பெயரால் நடக்கும் மூட பழக்க வழக்கங்களையும், போலி சாமியார்களையும் தோலுரித்துக் காட்டியது. இந்நிலையில், மூக்குத்தி அம்மன் படமும் மத அரசியலை எதிர்க்கும் விதமாக உருவாகி இருக்கிறது.

  நீட் ட்ரோல்

  நீட் ட்ரோல்

  மருத்துவப் படிப்பு படித்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் ஏழை மாணவர்களை அந்த கனவில் இருந்து ஒதுக்கி விடுவதற்காகவே வந்தது போல இருக்கும் இந்த நீட் தேர்வை எதிர்த்து அழகா படத்தில் செம ட்ரோலும் செய்துள்ளார் கூடவே ஆர்.ஜே. பாலாஜி. ஏகப்பட்ட சமூக அவலங்களையும் கிண்டல் செய்துள்ளார்.

  ஒன்லி மேஜிக் தான்

  ஒன்லி மேஜிக் தான்

  சாமி படங்களில் போய் லாஜிக் பார்த்தால் சரியாக இருக்காது. ஒன்லி மேஜிக்கான விஷயங்களைத் தான் என்ஜாய் பண்ண வேண்டும். ஒரு குடும்பத்தை காப்பாற்ற மட்டுமே தெய்வம் வராமல், ஒட்டுமொத்த சமூகத்தையும் காப்பாற்றுவதற்காக வந்தால் எப்படி இருக்கும் என கற்பனையாக யோசித்த இடத்திலே பாலாஜி சிக்ஸர் அடித்து விட்டார்.

  தீபாவளி சரவெடி

  நிச்சயம் மூக்குத்தி அம்மன் படம் தியேட்டர் மெட்டீரியல் தான். தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாகிறது. நிச்சயம் எல்.கே.ஜி படம் மாதிரி காமெடி கலந்த பக்தி படமாகவும், அரசியல் ட்ரோல்களுடன் களை கட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா என்னம்மா அழகா இருக்காங்க!

  English summary
  RJ Balaji debut direction Mookuthi Amman trailer smashing the social media. Nayanthara looking so gorgeous goddess in the fantastic trailer.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X