Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அவருக்கு மட்டும் எப்படி இவ்ளோ வாய்ப்பு? அந்த இளம் ஹீரோயினை போட்டு வாங்கும் சக நடிகைகள்!
சென்னை: அந்த இளம் ஹீரோயினுக்கு அதிக வாய்ப்பு கிடைத்து வருவதால், அவருக்கு எதிராக சில நடிகைகள் வதந்திகளை பரப்பி வருவதாகச் சொல்கிறார்கள்.
அப்பா பெயருடன் சேர்த்து மூன்று பெயர்களை சேர்த்து வைத்திருக்கிறார், அந்த இளம் நடிகை.
என் மகனுக்கு இணை யாரும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன்.. பாலாவால் காண்டான சுரேஷ் தாத்தா!
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் அவர். முதல் படத்திலேயே, கவனிக்கப் பட்டார்.

அவ்ளோ கிரேஸ்
அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்ளோ கிரேஸ். மொத்த லைக்ஸையும் அவர் மீதுதான் கொட்டியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் சின்ன படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. திடீரென டாப் ஹீரோக்கள் படங்களில் அழைப்பு வர, நடிகையின் மார்க்கெட் ஜிவ்வென ஏறி இருக்கிறது.

மெகா பட்ஜெட்
கொரோனாவுக்கு முன்பே, நடிகைக்கு சில மெகா பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சில முன்னணி இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார், நடிகை. குறுகிய காலத்திலேயே இப்படி வாய்ப்பு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம்தான் என்கிறார்கள்.

ஏற்கனவே காதல்
இதற்கிடையே நடிகர் ஒருவருடன் நடிகைக்கு காதல் என்றும் சில நடிகர்கள், நடிகையை பின் தொடர்வதாகவும் வழக்கம் போல காஸிப்ஸ் பரவ, நடிகை அப்செட் ஆனார். பிறகு வேறு வழியே இல்லாமல், நான் ஏற்கனவே காதல்லதான் இருக்கிறேன் என்றார். பிறகும் விடாமல் தொடர்ந்தது காஸிப் கதைகள்.

காஸிப் காதுகள்
ஒரு கட்டத்தில் நொந்து போன நடிகை, இவரைதான் நான் காதலிக்கிறேன், நாங்க, கல்யாணம் பண்ண போறோம் என்று வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது காதலரை அறிவித்த பிறகுதான் அமைதியானது, கோடம்பாக்க காஸிப் காதுகள். இப்போது நடிகைக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள்

வயிற்றில் அனல்
திடீரென நான்கைந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், அந்த நடிகை. அனைத்தும் பெரிய படங்கள். நடிகையின் கேரியர் கிராஃப், இந்த கொரோனா காலத்திலும் இப்படி திடீரென உயர்ந்ததைக் கண்டு மற்ற சக நடிகைகளுக்கு ஏற்கனவே வயிற்றில் அனல்.

ஜாலியாக இருக்கிறார்
இப்போது அந்த அனல் எக்கச்சக்கமாக அதிகரித்து இருக்கிறதாம். அந்த பொறாமை கோஷ்டிதான் நடிகை மீதான காஸிப் கதைகளை அங்கும் இங்கும் அவிழ்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், நடிகையோ இது எதற்கும் காது கொடுக்காமல், தான் உண்டு, தன் நடிப்பு உண்டு என்று செம ஜாலியாக இருக்கிறார்.