73 வயசுல இன்னாம்மா லிப் லாக் அடிக்கிறாரு.. வைரலாகும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரின் குஜால் போட்டோஸ்!

வெனிஸ்: நாம தான் இங்க கொரோனாவுக்கு பயந்து கிட்டு பீச்சுக்கெல்லாம் லீவு விட்டு வச்சுருக்கோம்.

ஆனால், இந்த ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் கடற்கரையே கதியென இந்த கொரோனா டைம்லயும் உல்லாசமாக ஊர் சுற்றி வருகின்றனர்.

தனது புதிய படமான 'தி புக் ஆஃப் விஷன்' படத்தை ரிலீஸ் செய்ய வெனிஸ் நகரம் சென்றுள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் டான்ஸ் கடற்கரையில், பெண் ஒருவருடன் லிப் லாக் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர்

ஜேம்ஸ் பாண்ட் படமான ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி, தி கிங்ஸ் மேன், ஜானி இங்கிலிஷ், ஏலியன், டிராகுலா, காட்ஸில்லா என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் சார்லஸ் டான்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் ட்வின் லானிஸ்டராக நடித்து அசத்தியிருப்பார்.

73 வயதிலும்

73 வயதிலும்

பழம்பெரும் நடிகரான சார்லஸ் டான்ஸுக்கு இப்போ 73 வயசு ஆகுது. இந்த வயதிலும் அவரது கட்டுமஸ்த்தான தேகம் கொஞ்சமும் வலுவிழக்காமல், வைரம் பாய்ந்தது போல இருப்பது குறிப்பிடத்தக்கது. கடலில் இருந்து வெளியே ஷர்ட் அணியாமல், அவர் நடந்து வரும் அழகை பார்த்தால் நிச்சயம் இளம் பெண்களும் மயங்கத்தான் செய்வார்கள்.

புதுப் பெண்ணுடன்

புதுப் பெண்ணுடன்

உலகப் புகழ்பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் ட்வின் லானிஸ்டர் கதாபாத்திரத்தில் முதல் நான்கு சீரிஸில் நடித்து பிரபலமானவர் சார்லஸ் டான்ஸ். 1970ம் ஆண்டு ஜோன்னா ஹேதோர்ன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், 2004ல் விவாகரத்து செய்தார். பின்னர், தண்டர் பேர்ட் நடிகை சோபியா மைல்ஸ் உடன் 2005 முதல் டேட்டிங் செய்தார். அதன் பின்னர், வேறு சில பிரபலமான பெண்களுடனும் டேட்டிங் செய்து வந்த சார்லஸ், தற்போது புதுப்பெண் ஒருவருடன் வெனிஸ் நகரில் ஜாலி டூர் அடித்து வருகிறார்.

லிப் லாக்

லிப் லாக்

வெனிஸ் நகரத்துக்கு வந்துவிட்டு, அங்குள்ள அழகிய கடற்கரைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? தன்னை விட மிகவும் வயது குறைந்த பெண் ஒருவருடன் கடற்கரையில் உல்லாசமாக சார்லஸ் டான்ஸ் இருந்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. அதிலும், அந்த லிப் லாக் புகைப்படத்தை பார்த்தால், இளம் நடிகர்களே பொறாமைப்படுவார்கள்.

தி புக் ஆஃப் விஷன்

தி புக் ஆஃப் விஷன்

செப்டம்பர் 3ம் தேதி, அதாவது நேற்று தனது புது படமான தி புக் ஆஃப் விஷன் படத்தின் ப்ரீமியர் காட்சிக்காக வெனிஸ் நகரத்துக்கு வந்துள்ளார் நடிகர் சார்லஸ் டான்ஸ். இயக்குநர் கார்லோ எஸ். ஹின்டர்மேன் இயக்கத்தில் உருவாகி உள்ள அந்த படத்தில் சார்லஸ் டான்ஸ் மற்றும் நடிகை லோட்டே வெர்பீக் லீடு ரோலில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X