கவுண்ட்டர் கிங் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இவ்வளவா?.. வாய் பிளந்த ரசிகர்கள்.. ராஜாவா இருக்காரே

சென்னை: கவுண்டமணி தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 85ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

உடுமலைப்பேட்டையை சொந்த ஊராக கொண்ட கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். நடிப்பு மீது ஆர்வம் கொண்ட அவர் ஒரு நாடக கம்பெனியில் இணைந்தார். அங்கிருந்தபடி சினிமாவுக்கும் அவர் முயற்சி செய்ய பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலம் அவர் நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. டைமிங்கில் கவுண்ட்டர் அடிப்பதால் சுப்பிரமணி கவுண்டமணி ஆனார். முதல் படத்திலேயே அவரது நடிப்பும், டைமிங்கும் ரசிகர்களை கவர ஆரம்பித்தன.

Goundamani Birthday Today Here are the Details about his Net Worth

கவுண்டமணி - செந்தில் காம்போ: எவர்க்ரீன் காமெடி காம்போ கவுண்டமணியும், செந்திலும் ஆவர். பல நூறு படங்களில் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கின்றனர். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் என அவர்கள் அதகளம் செய்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் பெரிது. ஒருகட்டத்தில் கவுண்டமணி இல்லாமல் செந்தில் இல்லை செந்தில் இல்லாமல் கவுண்டமணி இல்லை என்ற நிலையே திரைத்துறையில் நீடித்தது. அந்த அளவுக்கு இருவரும் நெருங்கி பழகினார்கள். கவுண்டமணி நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தபோது மீண்டும் நடிக்க வர வேண்டுமென்று அவருக்கு நீண்ட கடிதத்தையும் செந்தில் எழுதியது குறிப்பிடத்தக்கது.

விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி நகைச்சுவை: கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தவை. அவர் எல்லோரையும் உருவ கேலி செய்கிறார்; எட்டி உதைக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகிறார் சிலர் அவர் மீது விமர்சனத்தை வைப்பதுண்டு. ஆனால் அப்படி செய்தது தவறு என்றால் அவரது காமெடியை மக்கள் ரசித்திருக்கமாட்டார்கள். மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர் திரையில் கொண்டு வந்தார் என அவரது ரசிகர்கள் கூறுவர்.

யாராக இருந்தாலும் கலாய்தான்: கவுண்டமணி திரையில் மட்டுமில்லை நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார். 'ஏன் ப்பா எல்லோரும் நடிக்க வந்துட்டா யார்தான் படம் பார்க்குறது' என்று சந்தானத்திடம் ஒரு முறை கவுண்ட்டர் அடித்திருக்கிறார் கவுண்டமணி. அதேபோல், 'நாய்க்கு என்ன பெயர் வைப்பது அதுக்கு பேர் நாய்தான்', நடிகர் சங்க பெயர் பற்றிய ஒரு கேள்விக்கு 'நடிகர் சங்கம் என்று வையுங்கள்' என்றது என அவரது ஆஃப் கேமரா கவுண்ட்டர்களும் ரகளையாக இருப்பவை.

Goundamani Birthday Today Here are the Details about his Net Worth

ஓபன் டாக்: அதேபோல் கவுண்டமணி எவ்வளவுக்கு எவ்வளவு நகைச்சுவையாக பேசுகிறாரோ அந்த அளவுக்கு ஓபனாகவும் பேசக்கூடியவர். யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைக்கக்கூடியவர். நக்மாவுடன் நான் பாடலுக்கு நடனம் ஆடியே தீர வேண்டும் என்று முடிவு எடுத்து அதை சாதித்தும் காட்டியவர். கவுண்டமணிக்கு சுமித்ரா என்ற மகள் இருக்கிறார். அவர் விளம்பரமே இல்லாமல் அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் தனது கணவருடன் வந்து சேவை செய்வது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு: இந்நிலையில் கவுண்டமணி இன்று தனது 85ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்களும், செலிபிரிட்டிகளும் வாழ்த்து மழையை பொழிந்துவருகிறார்கள். இந்தச் சூழலில் கவுண்டமணியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவரை 320க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவருக்கு சொந்த ஊரில் பல ஏக்கர் அளவில் நிலங்கள் இருக்கின்றனவாம். அதேபோல் சென்னையிலும், தனது சொந்த ஊரிலும் பிரமாண்ட வீடுகளும் இருக்கும் அவருக்கு மொத்தம் 70 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம்.

ரீ என்ட்ரி: கவுண்டமணி இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ய அவர் ஒத்த நோட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் யோகிபாபுவும் நடித்துவருகிறார். கண்டிப்பாக இந்தப் படத்திலும் கவுண்டமணியின் கவுண்ட்டர்கள் பலரையும் சிரிக்க வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. பிறந்தநாள் வாழ்த்துகள் கவுண்டமணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X