84 வயதில் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய கவுண்டமணி.. மனுஷன் கண் கலங்கிட்டாரு!

சென்னை: சின்ன கவுண்டர், வைதேகி காத்திருந்தாள், சேதுபதி ஐபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த காமெடி ஜாம்பவான் கவுண்டமணி விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டதும் மனமுடைந்து போய் விட்டார். சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார் கவுண்டமணி.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் விஜயகாந்தை கடைசியாக ஒருமுறை பார்த்து விட வேண்டும் என தேமுதிக அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.

Goundamani came to DMDK office and pays last repect to Captain Vijayakanth

விஜயகாந்த் உடன் கவுண்டமணி: 80களில் சினிமாவில் ஏகப்பட்ட கிராமத்து சப்ஜெக்ட் படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர் விஜயகாந்த். வைதேகி காத்திருந்தாள், பொன்மனச் செல்வன், நெஞ்சிலே துணிவிருந்தால், பட்டத்து ராணி, அலை ஓசை, நானே ராஜா நானே மந்திரி, சின்னக் கவுண்டர், பெரிய மருது, சேதுபதி ஐபிஎஸ், சொக்கத் தங்கம் என பல படங்களில் கவுண்டமணி நகைச்சுவையில் கலக்கி உள்ளார். வைதேகி காத்திருந்தாள், சின்னக் கவுண்டர் படங்களில் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் இன்றளவும் ஏகப்பட்ட ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்ரன.

84 வயதிலும் நேரில் வந்து கேப்டனுக்கு அஞ்சலி: விஜயகாந்துக்கு தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மரியாதை உள்ளது. 84 வயதாகும் கவுண்டமணி அதிகப்படியாக பொது இடங்களுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ வருகைத் தரமால் இருந்து வந்த நிலையில், விஜயகாந்த் மறைவு அவரை வீட்டில் இருக்க வைக்கவில்லை. துக்க செய்தி கேட்டதும் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் விஜயகாந்தின் உடலை நேரில் சென்று பார்த்து விட்டு மாலை அணிவித்து வந்துள்ளார்.

வடிவேலு வருவாரா?: நகைச்சுவை நடிகர்கள், நடிகர் சங்க பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். கவுண்டமணியை தொடர்ந்து விஜயகாந்தின் பல படங்களில் காமெடி செய்த வடிவேலு விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நேரில் வருவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X