Goundamani - கவுண்டமணியின் மகளை பார்த்திருக்கிறீர்களா?.. அவர் என்ன சேவை செய்கிறார் தெரியுமா?
சென்னை: நடிகர் கவுண்டமணி முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவரும் செந்திலும் சேர்ந்து காமெடியில் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியிருந்தனர். கவுண்டமணி எவ்வளவுதான் ஃபேமஸாக இருந்தாலும் தனது குடும்பத்தை கேமரா கண்களிலிருந்து மறைத்தே வைத்திருப்பவர். இந்த சூழலில் அவரது மகள்களில் ஒருவரான சுமித்ராவின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் கவுண்டமணி. முற்போக்கு கருத்துக்களையும், டைமிங் கவுண்ட்டர்களையும் கவுண்டமணி தனது நகைச்சுவை மூலம் பிரதிபலித்தவர். எந்த காமெடி நடிகர் வந்தாலும் அவரது சாயல் இல்லாமல் ஒரு காமெடியும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அவரது தாக்கம் பலரிடத்தில் இருக்கும். உதாரணமாக சந்தானத்தையே கவுண்டமணியின் அப்டேட் வெர்ஷன் என்றுதான் ஒருதரப்பினர் கூறினர்.

விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி நகைச்சுவை: கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தவை. அவர் எல்லோரையும் உருவ கேலி செய்கிறார்; எட்டி உதைக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகிறார் சிலர் அவர் மீது விமர்சனத்தை வைப்பதுண்டு. ஆனால் அப்படி செய்தது தவறு என்றால் அவரது காமெடியை மக்கள் ரசித்திருக்கமாட்டார்கள். மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர் திரையில் கொண்டு வந்தார் என அவரது ரசிகர்கள் கூறுவர்.
எவர்க்ரீன் கூட்டணி கவுண்டமணி, செந்தில்: எத்தனை விமர்சனங்களை சந்தித்தாலும் கவுண்டமணி & செந்தில் கூட்டணிதான் தமிழ் சினிமா நகைச்சுவையின் கொண்டாட்டமான காலம். ஒருபக்கம் கவுண்டமணி கவுண்ட்டர்கள் கொடுக்க, மறுபக்கம் செந்தில் வெகுளித்தனமான முகத்தையும், சிரிப்பு வரவைக்கக்கூடிய உடல் மொழி, வாய் மொழியையும் வைத்துக்கொள்ள இருவரையும் ஸ்க்ரீனில் பார்த்தாலே இப்போதும் வயிறு வலிக்க சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.
யாராக இருந்தாலும் கலாய்தான்: கவுண்டமணி திரையில் மட்டுமில்லை நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார். இதனை சத்யராஜ் பலமுறை பொதுவெளியில் சொல்லியிருக்கிறார். உதாரணமாக, ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் ஒருவர் கவுண்டமணியிடம், சார் நான் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்திருக்கிறேன்.
ஒரு பள்ளிக்கு விருந்தினராக சென்றபோது அங்கு இருந்தவர்கள் நீங்கள் ஹீரோவாக நடிக்கலாமே என்று சொன்னார்கள் அதான் இந்த முடிவு என்றாராம். அதற்கு கவுண்டமணியோ அது பிளைண்ட் ஸ்கூலாக இருக்கும் ப்பா என்று டைமிங்கில் சொன்னாராம். இப்படி யாராக இருந்தாலும் கவுண்ட்டர் கொடுத்துவிட்டுவார் கவுண்டமணி.
ரீ எண்ட்ரி: சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த கவுண்டமணி 49 ஓ என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்திலும், பழனிச்சாமி வாத்தியார் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இந்த சூழலில் கவுண்டமணியின் குடும்பம் பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. அவர் சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு செல்வி, சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
சுமித்ரா புகைப்படம்: இந்நிலையில் கவுண்டமணியின் மகள் சுமித்ராவின் புகைப்படம் என்ற ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் மாதிரி இருக்காங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். மேலும் அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் தனது கணவருடன் வந்து சேவை செய்வதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











