Goundamani: டாப் ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்த நக்கல் மன்னன்... கவுண்டமணியின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் கவுண்டமணி.

சுமார் 60 வருடங்களாக திரையுலகில் பயணித்து வரும் கவுண்டமணிக்கு இன்று 85வது பிறந்தநாள்.

தனது கவுண்டர் காமெடிகளால் பிரபலமான கவுண்டமணி ஒரு மேடை நாடக நடிகர் என்பதே பலரும் அறியாதது.

அதேபோல், கவுண்டமணியின் பின்னணி குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

 Goundamani: Nakkal Mannan Goundamani Birthday special story

ஆல் இன் ஆல் நக்கல் மன்னன்:தமிழ் திரையுலகின் தனித்துவமான காமெடி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் கவுண்டமணி. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கவுண்டமணி, ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். தனித்த குரல் வளம், ஒவ்வொரு வசனத்துக்கும் ஒரு கவுண்டர் என ரசிகர்களின் வயிற்றை தனது காமெடிகளால் பதம் பார்த்தார் கவுண்டமணி.

இவரது கவுண்டர் ரக காமெடிகள் தான் கவுண்டமணி என்ற பெயர் வரவே காரணமானதும் குறிப்பிடத்தக்கது. சுப்ரமணியன் கருப்பையா என்ற பெயரில் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னாளில் கவுண்டமணியாக மாறினார். எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரின் படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்துள்ள கவுண்டமணி, 16 வயதினிலே படத்தில் தான் சினிமா நடிகனாக பிரபலமானார். பரட்டை கேரக்டரில் நடித்த ரஜினிக்கு பக்கத்தில் உட்கார்ந்தபடி, 'பத்தவச்சிட்டியே பரட்டை' என கவுண்டமணி அடித்த கவுண்டர் இப்போதும் தனி ரகம் தான்.

அதேபோல், 'இதெப்படி இருக்கு' என்று ரஜினி கேட்க, 'நல்லா இல்ல' என டைமிங்கில் ரைமிங்காக அட்டாக் செய்தார் கவுண்டமணி. இந்த டைமிங் ரைமிங் கான்செப்ட் கவுண்டமணிக்கு பக்காவாக செட்டாக, தனது கேரியர் முழுவதும் இதே ஃபார்முலாவில் மாஸ் காட்டினார். ரஜினி, கமல், விஜயகாந்த், ராமராஜன், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் தொடங்கி விஜய், அஜித், சிம்பு வரை அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.

கவுண்டமணியின் கவுண்டர் அட்டாக்கிற்கு பயந்து கமல் உள்ளிட்ட சில நடிகர்கள் அவருடன் ஓரிரு படங்களுக்கு மேல் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் கவுண்டமணியின் ரைமிங் அட்டாக் மிஸ்ஸாகவே செய்யாது. அதேநேரம் கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்காமல் பல முன்னணி ஹீரோக்களும் அவருக்காக காத்திருந்ததும் நடந்துள்ளது.

 Goundamani: Nakkal Mannan Goundamani Birthday special story

மிக முக்கியமாக கவுண்டமணி - செந்தில் கூட்டணியில் உருவான காமெடிகள் இன்றைக்கும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளன. கரகாட்டகாரன் திரைப்படத்தின் கமெடி ஒன்றே இதற்கு முக்கியமான சாட்சி எனலாம். மேலும், "ஊருக்குள்ள இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா", "அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா", "இவரை தெரில... அட இவர தெரில", "நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இதெல்லாம் தேவையா" என அடுக்கடுக்காக பல பஞ்ச் வசனங்கள் கவுண்டமணியின் டாப் மோஸ்ட் எனலாம்.

கவுண்டமணி - ரஜினி காம்போ, கவுண்டமணி, சத்யராஜ், மணிவண்ணன் கூட்டணி எப்போதுமே கிளாஸிக் ரகமாகவே இருந்துள்ளது. இந்நிலையில் விரைவில் கவுண்டமணி நடிப்பில் பழனிசாமி வாத்தியார் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போதும் தனது கவுண்டர் கமெடிகளுக்கு குறையில்லாத கவுண்டமணி, இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ தமிழ் பிலிமிபீட் சார்பாக வாழ்த்தலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X