Otha Votu Muthaiya Box Office: ஒத்த ஓட்டு முத்தையா.. கவுண்டமணியின் கம்பேக் படமா? வசூல்தான் எவ்வளவு?

சென்னை: கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா உள்ளிட்ட பலரும் நடித்த படம் ஒத்த ஓட்டு முத்தையா. சாய் ராஜகோபால் இயக்கிய இந்தப் படத்தை சினி கிராஃப்ட் புரெடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி இன்றோடு மூன்று நாட்கள் ஆகிறது. இந்நிலையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

கவுண்டமணி நடிப்பில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா. படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள், படம் அரசியல் நையாண்டி படம் என்பதை தெரிந்து கொண்டார்கள். இப்படியான நிலையில், கவுண்டமணி நடிப்பில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் ரிலீஸ் ஆன இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Goundamani Otha Votu Muthaiya Otha Votu Muthaiya Collection

படத்தில் கவுண்டமணி அரசியல்வாதியா நடித்துள்ளார். மிகப்பெரிய அரசியல்வாதியாக பார்க்கப்படும் இவர், தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவுகிறார். இதனால், இவரை பலரும் ஒத்த ஓட்டு முத்தையா என அழைக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, தான் இருந்த கட்சியில் இருந்து விலகி, அடுத்து நடைபெறும் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதேபோல் குடும்பத்தில் அண்ணனாக, தனது தங்கைகள் மூவருக்கும் ஒரே குடும்பத்தில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு உள்ளார். இறுதியாக இவர் நினைத்தது எல்லாம் நடந்ததா என்பதுதான் கதை.

பாராட்டு: படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டினர். குறிப்பாக 85 வயதிலும் கவுண்டமணி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவரது முதிர்ச்சியான நடிப்பும் நகைச்சுவை உணர்வுமே படத்தை வெற்றிப் படமாக மாற்றும் என கூறுகிறார்கள். விமர்சகர்கள் பலரும் 85 வயதிலும் கவுண்டமணி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது குரலும் உடல் மொழியும் அருமையாக உள்ளது என விமர்சித்தனர். படத்தில் கவுண்டமணிக்கு சண்டைக் காட்சி வைத்துள்ளார்கள், அதை தவிர்த்திருக்கலாம் என்று விமர்சித்துள்ளனர்.

Goundamani Otha Votu Muthaiya Otha Votu Muthaiya Collection

வசூல்: கவுண்டமணியுடன் பெரும் நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளதால், படம் முழுவதும் நகைச்சுவையாக உள்ளது. சில இடங்களில் காமெடி ஒர்க் - அவுட் ஆகவில்லை என்றாலும் பல இடங்களில் காமெடி படத்திற்கு பலம் சேர்த்துள்ளது எனவும் கூறுகின்றனர். இப்படியான நிலையில் படம் முதல் இரண்டு நாட்களில் மட்டும் மொத்தமாக ரூபாய் 40 லட்சங்கள் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வார இறுதி நாள் என்பதால் படத்தின் வசூல் இன்றும் அதிகரிக்கும் எனவும், குடும்ப ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், வார நாட்களிலும் படம் நல்ல வசூல் செய்யும் என படக்குழு எதிர்பார்க்கிறது.

Goundamani Otha Votu Muthaiya Otha Votu Muthaiya Collection

பொறுப்பு துறப்பு: படங்களின் வசூல் குறித்த தகவல்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பெறப்பட்ட தகவலே தவிர, படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் விபரம் அல்ல.

Goundamani Otha Votu Muthaiya Otha Votu Muthaiya Collection

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X