மனசே இடிஞ்சு போச்சு.. தள்ளாத வயதில் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவுண்டமணி.. பாவம் மனுஷன்

சென்னை: மனோஜ் பாரதிராஜா மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரின் மறைவு செய்தி அறிந்ததுமே நேரில் வந்து அஞ்சலி செய்த காமெடி ஜாம்பவான் பாக்யராஜ் மறைவு செய்தி அறிந்து மேலும், மனம் உடைந்து விட்டார். தள்ளாத வயதில் பாக்யராஜ் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன.

80 வயதை கடந்த தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து எந்தவொரு திரைக் கலைஞர் மறைந்தாலும், அவருக்கு செலுத்த வேண்டிய இறுதி மரியாதை சரியாக நேரில் சென்று செலுத்துவது எல்லாம் அந்த காலத்து ஆட்களின் ரத்தத்தில் ஊறிய செயல் என்றே பலரும் கூறி வருகின்றனர்.

Goundamani pays last respect to Bhagyaraj demise

16 நாட்களுக்கு முன்னதாக பாரதிராஜாவின் மறைவு செய்தி அறிந்து துக்கம் தாங்காமல் அஞ்சலி செலுத்திய கவுண்டமணி இன்று பாக்யராஜ் மறைந்ததை அறிந்து மனசே உடைந்துப் போய் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றுள்ளார்.

நம்பவே முடியல: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக தியேட்டரில் மக்கள் கூட்டத்தை கூட்டியவர் பாக்யராஜ். குறிப்பாக பெண்கள் தியேட்டர் பக்கம் அதிகம் வரக் காரணமாக அமைந்தவரும் பாக்யராஜ் தான். அவர் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பதே நம்ப முடியவில்லை என ஸ்ரீ ப்ரியா உள்ளிட்ட பிரபலங்கள் கூறி வருகின்றனர். இப்போ தான் குஷ்பு மகள் திருமணத்தில் நல்லா எங்களுடன் எல்லாம் சிரித்துப் பேசி சாப்பிட்டு மகிழ்ந்தாரே, அதற்குள் என்ன ஆனது என பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.

சிவகுமார் முதல் விஜய் வரை நேரில் அஞ்சலி: பாக்யராஜ் உயிரிழந்த தகவல் அறிந்த நிலையில், அவரது இல்லத்துக்கு உடல் வந்ததும் கண் தானம் செய்த நிலையில், மருத்துவர்கள் அதற்கான பணிகளை செய்துவிட்டுச் சென்றனர். சிவகுமார், மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் விஜய், சரத்குமார், ராதிகா, பார்த்திபன், பாண்டியராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

கவுண்டமணி நேரில் அஞ்சலி: 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக இருக்கும் போதே அந்த படத்தில் கவுண்டமணி நடித்த நிலையில், இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பாக்யராஜ் நடித்த சில படங்களிலும் கவுண்டமணி நடித்துள்ளார். இந்நிலையில், பாக்யராஜ் மறைவு செய்தி அறிந்த கவுண்டமணி ரொம்பவே கலங்கிய மனதுடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். திரைத்துறையில் தன்னுடன் பணியாற்றிய பிரபலங்களை இப்படி இழக்க நேரிடுகிறதே என ரொம்பவே மனுஷன் வேதனையடைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X