கவுண்டமணி நடிக்கும் 49 ஓ... நாளை மறுநாள் ட்ரைலர் வெளியீடு!

By Shankar

கவுண்டமணி நாயகனாக நடிக்கும் 49 ஓ படத்தின் முன்னோட்ட வெளியீடு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடக்கிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் சிகரம் தொட்ட நடிகர் கவுண்டமணி. இன்றும் அவர் நகைச்சுவைக்கு தனி மவுசு உள்ளது. வயது வித்தியாசமில்லாமல் ரசிக்கும் நகைச்சுவைக்கு சொந்தக்காரர் அவர்.

Goundamani's 49 O trailer from September 12

இன்றைக்கு சமூக வலைத் தளங்களில் பெருமளவு பயன்படுத்தப்படுவது அவரது நகைச்சுவைதான்.

கடந்த சில ஆண்டுகளாக எந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்து வந்த கவுண்டமணி, இப்போது வாய்மை மற்றும் 49 ஓ படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதில் 49 ஓ படத்தை கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார். அரசியல் அமைப்புப் பிரிவில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் 49-ஓ என்ற உரிமை குறித்த கதை என்றாலும் முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக வந்து விவசாயிகளின் பிரச்சனைகளை எடுத்துரைப்பதாகக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் முன்னோட்டக்காட்சி வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X