»   »  'எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' .. அரசியல் நையாண்டியுடன் களமிறங்கும் கவுண்டமணி

'எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' .. அரசியல் நையாண்டியுடன் களமிறங்கும் கவுண்டமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுண்டமணி நடிப்பில் உருவாகியிருக்கும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது திரைப்படம், வருகின்ற மே மாதம் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் காமெடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுபவர் கவுண்டமணி. இன்றைக்கு கொடி கட்டிப் பறக்கும் மீம்ஸ், அரசியல் நையாண்டிகளுக்கு பாதை போட்டுக் கொடுத்த பெருமை,புகழ் அனைத்தும் இவரையே சேரும்.

Goundamani's Engalukku Veru Engum Kilaigal Kidaiyaathu

76 வயதான கவுண்டமணி ஏகப்பட்ட அரசியல் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். இன்றளவும் கவுண்டரின் நக்கலான வசனங்களையும், நடிப்பையும் அடித்துக் கொள்ள ஆளில்லை.

இந்நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ள எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் கவுண்டமணி நாத்திகராக நடித்திருக்கிறார் எனக் கூறுகின்றனர்.

'கேரவன் கிருஷ்ணன்' என்னும் கதாபாத்திரத்தில் இப்படத்தில் அவர் நடித்திருப்பதாகவும், 49ஓ போல இப்படமும் அரசியல் கதைதான் என்றும் படப்பிடிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கவுண்டமணியுடன் இணைந்து சனா, சவுந்தர்ராஜன், ரித்விகா நடித்திருக்கும் இப்படத்தில், பாடகர் வேல்முருகன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

வருகின்ற மே மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Goundamani's Engalukku Veru Engum Kilaigal Kidaiyaathu May be Released on May.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil