ஒழுங்கா மாறிடு.. இல்லை தூங்கும்போது முடியை வெட்டிடுவேன்.. சத்யராஜ் மகளை மிரட்டிய கவுண்டமணி

சென்னை: இந்திய சினிமாவின் லெஜெண்ட் கவுண்டமணி. எக்கச்சக்க படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்த் அவர்; இப்போது வயோதிகம் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். இடையே சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கவுண்டமணிகுறித்து பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்திய சினிமாவின் நகைச்சுவை நட்சத்திரங்களில் கவுண்டமணி முக்கியமானவர். செந்திலுடன் அவர் சேர்ந்து செய்த காமெடிகளுக்கு எப்போதுமே அழிவில்லை. இப்போதயை ஜென் ஸி தலைமுறைகள்கூட அவர்களது காமெடியை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பீக்கில் இருந்த சமயத்தில் இரண்டு பேரின் காமெடி காட்சிகள் இருந்தாலே போதும் அந்தப் படங்கள் ஹிட்டாகிவிடும் என்கிற நிலைமை இருந்தது. அதனால் ஒரே நாளில் பல படங்களில் அவர்கள் நடித்தார்கள்.

Goundamani s Fun Side Revealed Sathyaraj s Daughter Divya Shares Viral Anecdote
Photo Credit:

ஒருநாள் சம்பளம்: பொதுவாக திரைத்துறையில் ஒரு பேச்சு உண்டு. அதாவது ஒரு நாளுக்கு சம்பளம் என்ற ஃபார்முலாவை வடிவேலுதான் பிரபலப்படுத்தினார் என்று. ஆனால் அவருக்கு முன்னதாகவே அதற்கு விதை போட்டது என்னவோ கவுண்டமணிதான். அவர் பீக்கில் இருந்தபோது ஒரு நாளில் எட்டு மணி நேரம் நடித்தால் சம்பளமாக லட்சம் ரூபாய்வரை கொடுக்கப்பட்டது.

கவுண்டமணியின் டேலண்ட்: அதேபோல் அவரது காமெடி காலங்கடந்து கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமே அவருக்குள் இருந்த பரந்த பார்வைதான். அப்போதே அவர் பார்ப்பது பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள்தான். மேலும் உலக அரசியல், நடப்புகள் என அனைத்தையுமே விரல் நுனியில் வைத்திருப்பார். அந்த அனுபவங்களின் அடிப்படையில்தான் தன்னுடைய ஒவ்வொரு காமெடியிலும் ஏதோவொரு புதுமையையும், நாட்டு நடப்புகளையும் வைத்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஒதுங்கிய கவுண்டமணி: சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஆனால் அவரை பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. காலப்போக்கில் வயோதிகம் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இடையில் சில படங்களில் நடித்தார். ஒத்த ஓட்டு முத்தையா, 49 ஓ என பொது கருத்துக்கள் பேசக்கூடிய படங்களில் மட்டுமே நடித்தார். படங்கள் எல்லாம் தோல்வியைத்தான் சந்தித்தன. இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தனியார் யூடியூப் சேன்ல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியுள்ளது.

ட்ரெண்டாகும் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "கவுண்டமணி மாமானா எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு டீன் ஏஜ் வயது இருக்கும்போது ஒரு ஹீரோவின் மீது பெரிய க்ரஷ்ஷில் இருந்தேன். அவரை பற்றி புகழ்ந்துகொண்டே இருப்பேன். ஆனால் அவருக்கு அந்த ஹீரோவை பிடிக்காது. அந்த ஹீரோவிடம் அப்படி என்ன இருக்கிறது என்று இவ்வளவு ரசிக்கிறாய் என்று கேட்பார். மேலும், அந்த ஹீரோவை ரசிப்பதை நிறுத்திவிடு; இல்லையென்றால் நீ தூங்கும்போது உனது முடியை வெட்டிவிடுவேன் என கூறுவார். அவர் மீது நான் ரொம்பவே பொசசிவ்வாக இருப்பேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X