கவுண்டமணி டோட்டலாவே வேற மாதிரிங்க.. பிரபல நடிகை ஓபனாக சொல்லிட்டாங்களே.. என்னனு பாருங்க?

சென்னை: கோலிவுட்டில் கவுண்டமணி ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அதன் காரணமாகத்தான் அவருக்கு பின்னால் வந்த பல காமெடி ஆக்டர்கள் அவரது ஸ்டைலையே ஃபாலோ செய்யும் நிலை உருவானது. இப்போது வயோதிகம் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர்; திரைத்துறையில் தனக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்தால் தவறாமல் அங்கு சென்று துக்கம் விசாரிக்கிறார். இந்நிலையில் அவர் பற்றி நடிகை சுகன்யா பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

உடுமலைப்பேட்டையை சேர்ந்த கவுண்டமணி முதலில் நாடகங்களில் நடித்து பிறகு சினிமாவுக்கு வந்தவர். நாடகங்களில் நடிக்கும்போது யார் என்ன பேசினாலும் சளைக்காமல் டைமிங் கவுண்ட்டர்களை போட்டதால் அவர் கவுண்டமணி ஆனார். சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக தனது காமெடியால் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்ப தொடங்கினார் அவர்.

கவுண்டமணியின் தளபதி செந்தில்: அந்த சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்ப அவரது தளபதியாக செயல்பட்டார் நகைச்சுவை நடிகர் செந்தில். இரண்டு பேரும் சேர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர்கள் இருவரும் ஸ்க்ரீனில் வந்தாலே அந்தப் படம் ஹிட் என்ற நிலைமை ஒருகாலத்தில் இருந்தது. தங்கள் பக்கம் அடித்த காற்றை தவறாக பயன்படுத்தாமல்; ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி காண்பித்து கவுண்டமணியும், செந்திலும் கடுமையான உழைப்பை கொட்டினார்கள்.

Goundamani s Humanity Still Shines Actress Suganya Shares Heartwarming Memories of the Comedy Legend
Photo Credit:

சினிமாவிலிருந்து ஒதுங்கிய கவுண்டமணி: ஒருநாளைக்கு பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அவருக்கு; ஒருகட்டத்தில் வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தன. இதனால் அவரும் டீசன்ட்டாக சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். இடையில் 49 ஓ, ஒத்த ஓட்டு முத்தையா போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். கவுண்டமணி ஒதுங்கினாலும்; அவர் காமெடி ஏற்படுத்திய தாக்கம் மற்ற நடிகர்களுக்கும் இருக்கிறது. அதனால்தான் சந்தானம் உள்ளிட்டோரின் காமெடியில் கவுண்டமணியின் ஸ்டைல் இருக்கிறது.

கவுண்டமணியின் நல்ல குணம்: கவுண்டமணியின் மனைவி அண்மையில்தான் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இது ஒருபக்கம் இருக்க திரைத்துறையில் தனக்கு நெருக்கமானவர்களோ, தன்னுடன் பணியாற்றியவர்களோ உயிரிழந்தால் தவறாமல் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவும் செய்கிறார். 86 வயதிலும் தவறாமல் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் அவரை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். ஏனெனில் அந்த செயலை சினிமா செலிபிரிட்டிகள் பலர் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுகன்யா பேட்டி: இந்நிலையில் கவுண்டமணி பற்றி பிரபல நடிகை சுகன்யா சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசியபோது, "என் அப்பா தயாரித்த படத்தில் அவர்தான் ஹீரோவாக நடித்தார். அந்த சமயத்தில்தான் நான் சினிமாவில் அறிமுகமும் ஆகியிருந்தேன். ஏற்கனவே பழக்கம் என்பதால் வாம்மா போம்மா என்று அன்போடு, உரிமையோடு பேசுவார். நாம் சினிமாவில் பார்ப்பது மாதிரி அவர் இல்லை. அபாரமான அறிவு உண்டு. நிறைய ஆங்கில படங்களை பார்ப்பார். இந்தப் படத்தை பார் அந்தப் படத்தை பார் உனக்கு உபயோகமாக இருக்கும் என்று எனக்கும் சொல்வார். ரொம்பவே அறிவான மனிதர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X