வருகிறார் 'டாக்டர் பென்னி'.. அவர்தான் நம்ம கவுண்டமணி!

By Sudha

சென்னை: மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை மன்னன் கவுண்டமணி நடிக்க வருகிறார். டாக்டர் பென்னி என்ற கதாபாத்திரத்தில், வாய்மை என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் கவுண்டமணி.

பாக்யராஜின் மகன் சாந்தனுதான் இப்படத்தின் நாயகன். பாக்யாராஜுடனான நட்புக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் கவுண்டமணி.

வழக்கம் போல படம் முழுக்க வரும்படியான கேரக்டராம் கவுண்டமணிக்கு. பழைய கவுண்டமணியாக இதில் அவர் கலகலக்க வைக்கப் போகிறாராம்.

சாந்தனு - தாமிரபரணி பானு

சாந்தனு - தாமிரபரணி பானு

சாந்தனுவுக்கு இப்படத்தில் ஜோடி போடுவது பானு. இவர் தாமிரபரணி படத்தில் நாயகியாக நடித்தவர்.அதன் பின்னர் பெரிய இடைவெளி விட்டு அழகர்மலை என்ற படத்தில் நடித்தார். பின்னர் மறுபடியும் காணாமல் போனார். இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

ராம்கி - ஊர்வசி

ராம்கி - ஊர்வசி

இவர்கள் தவிர முக்கியப் பாத்திரங்களில் ராம்கியும், ஊர்வசியும் நடிக்கிறாரக்ளாம்.

கவுண்டமணி - டாக்டர் பென்னி

கவுண்டமணி - டாக்டர் பென்னி

டாக்டர் பென்னி என்ற வேடத்தில் வருகிறார் கவுண்டமணி. இதுதான் படத்தோட முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.

சுப்பிரமணியாக இருந்து கவுண்டமணியான கதை

சுப்பிரமணியாக இருந்து கவுண்டமணியான கதை

கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணி. ஆனால் அவர் நடித்த நாடகம் ஒன்றில் அவரது கேரக்டர் பெரிதாகப் பேசப்பட அந்த கேரக்டரின் பெயரில், அதாவது கவுண்டர் என்ற கேரக்டருடன் சேர்த்து அவரை கவுண்டமணி என்று கூப்பிட ஆரம்பித்தனர்.

750 படங்கள்

750 படங்கள்

கவுண்டமணி இதுவரை 750 படங்களில் நடித்துள்ளார்.அத்தனையிலும் நடிப்பிலும், வில்லத்தனத்திலும், காமெடியிலும் பட்டையைக் கிளப்பிய படங்கள் ஆகும். எல்லாவிதமான கேரக்டர்களிலும் கொடி கட்டிப் பறந்தவர் கவுண்டமணி.

நடிப்பை வெறுக்க வைத்த சிம்பு

நடிப்பை வெறுக்க வைத்த சிம்பு

இப்படிப்பட்ட கவுண்டமணி நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கிப் போகும் அளவுக்கு நடந்த சம்பவம்தான் மன்மதன் படத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம். அவரது காமெடிக் காட்சிகளை முழுதாக படத்தில் சேர்க்காமல் பல காட்சிகளை வெட்டி வீசி விட்டார் படத்தின் இயக்குநரான நடிகர் சிம்பு. இதனால் அதிர்ச்சியாகிப் போன கவுண்டமணி நடிப்பையே விட்டு விட்டார்.

பாக்யராஜ் மகனுக்காக

பாக்யராஜ் மகனுக்காக

இப்போது பாக்யராஜின் மகன் சாந்தனுவுக்காக வாய்மை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். மேலும் அவரது உடல் நலமும் நன்றாக இருப்பதால் டாக்டர்கள் நடிக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டி விட்டனராம். இதனால் முழுத் தெம்புடன் நடிப்புக் களத்தில் மீண்டும் குதிக்கிறாராம் கவுண்டமணி.

ஏற்றம் கொடுத்த பாக்யராஜ்

ஏற்றம் கொடுத்த பாக்யராஜ்

கவுண்டமணிக்கு ஏற்றம் கொடுத்த இயக்குநர்களில் பாக்யராஜும் ஒருவர். இவரது சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். நீண்ட கால நட்பின் காரணமாக சாந்தனுவுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் கவுண்டமணி.

..ணா, வாங்ணா... சீக்கிரம் வந்து காமெடியைக் காட்டுங்ணா..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X