காமெடி கிங்.. வரும் மே மாதம் வந்தா 87 வயசு.. பாண்டிச்சேரியில் கவுண்டமணியுடன் செல்ஃபி எடுத்த ஃபேன்!

சென்னை: சினிமாவில் நடிப்பதை விட்டு ஒதுங்கி ஓய்வெடுத்து வரும் காமெடி கிங் கவுண்டமணி ஹெல்தியா இருக்காரா? எப்படி இருக்காரு? என்றெல்லாம் அவரது ரசிகர்கள் சிந்தித்து வரும் நிலையில், சமீபத்தில் பாண்டிச்சேரியில் ரசிகர் ஒருவர் அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோ வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் கடைசியாக கவுண்டமணியை அவர் வீட்டுக்குச் சென்று பார்த்து பேசிவிட்டு வந்த புகைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி நடிக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், அதன் பிறகு அதுதொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

Goundamani spotted at Pondicherry after a fan took a selfie with him goes viral
Photo Credit:

தமிழ் சினிமா ரசிகர்களை இன்றளவும் தனது காமெடி காட்சிகள் மூலமாக சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் காமெடி ஜாம்பவான் கவுண்டமணி முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கு என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகின்றனர்.

87வது பிறந்தநாள்: கோவையில் உள்ள கண்ணம்பாளையத்தில் கடந்த 1939ம் ஆண்டு மே 25ம் தேதி பிறந்த சுப்பிரமணி சினிமாவில் கவுன்ட்டர் ஜோக்குகளை அடித்து பிரபலமான நிலையில், கவுன்ட்டர் மணி என்றழைக்கப்பட்டார். பேச்சு வழக்கில் அது அப்படியே கவுண்டமணி என்றானது. வரும் மே 25ம் தேதி 87வது பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கிறார் காமெடி கிங் கவுண்டமணி.

ரசிகருடன் செல்ஃபி: பல மாதங்களாக கவுண்டமணி பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ரசிகர் ஒருவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் மூலமாக கவுண்டமணி எப்படி இருக்கிறார் என்பதை ரசிகர்கள் அறிந்துக் கொண்டனர். பாண்டிச்சேரி அருகே கவுண்டமணி உடன் அந்த போட்டோவை எடுத்துக் கொண்டதாக அந்த ரசிகர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சேயோன் படத்தில் நடிக்கிறாரா?: மாவீரன் பட சமயத்திலேயே சிவகார்த்திகேயன் கவுண்டமணியை நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் வெளியாகின. சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் கவுண்டமணி நடிக்கிறாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், அதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மீண்டும் வெள்ளித்திரையில் சரியான கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தாய் கிழவி போன்ற தரமான கதையில் எல்லாம் கவுண்டமணி நடித்தால் கலக்கலாக இருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X